×

துவங்கியது தென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும்

 
rain

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி துவங்கும். ஆனால், இந்த முறை சற்று தாமதமாக ஜூன் 3ம் தேதி கேரளாவில் துவங்கியுள்ளது. அடுத்த வாரம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தென் மேற்கு பருவ மழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News