×

ஊரடங்கு நீட்டிப்பு!.. எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்?

 
lockdown

தமிழகத்தில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடக்கு மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், தஞ்சை, நாமக்கல், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அது என்னென்ன தளர்வுகள் என்று பார்ப்போம்:

1.மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2. இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனை மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

3. அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

4. சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

5. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.,

அது என்னென்ன தளர்வுகள் என்று பார்ப்போம்:

தனியாக செயல்படும்  மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள்  காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி...

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி 

மீன் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்க

அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதி

மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதி

மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி

ஹார்டுவேர் கடைகள்  காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி

வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி

கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி

வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி

வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் அனுமதி

என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News