×

ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

 
stalin

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின் அந்த ஊரடங்கு ஜுன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் விளைவாக 35 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து நேற்று 24,405 ஆக குறைந்தது.  நாட்கள் செல்ல செல்ல இது மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், சென்னை, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. எனவே, ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்படுமா என்கிற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடக்கு மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், தஞ்சை, நாமக்கல், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் தொற்று குறைந்து வருவதால் கூடுதலான தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று குறைவான பகுதிகளில் மளிகை, காய்கறிக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

மளிகை, காய்கறி, இறைச்சி, பூக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து அரசு அலுவலகங்களும் 30% ஊழியர்களுடன் திங்கட்கிழமை முதல் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களிலும் தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், மீன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News