×

அடுத்த ஊரடங்கில் தளர்வுகளுக்கு வாய்ப்பு..  மு.க. ஸ்டாலின் ஆலோசனை...

 
lockdown

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மாஸ்க் அணியாமல் வெளியே வருவது, தேவையின்றி வெளியே வருவது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது என கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பலரும் கடைபிடிக்கவில்லை. 

எனவே, தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் 35 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு 27 ஆயிரமாக குறைந்துள்ளது. ஜூன் 7ம் தேதிக்கு பின் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பின் போது கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.  கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கு விதிகளை கடுமையாக அமுல்படுத்துவது பற்றியும் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக செய்தி வெளிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News