×

நகை வாங்க சரியான நேரம் இதுதான்.... சவரனுக்கு ரூ.320 குறைந்தது!...

 
gold rate

கொரோனா 2வது அலை காரணமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தற்போது நகைக்கடைகள் மூடப்பட்டிருப்பதால் நீங்கள் ஆன்லைனில் நகைகளை வாங்கலாம். சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 ஆக இன்று அதிரடியாக குறைந்து, ஒரு கிராம் ஆபாரண தங்கத்தின் விலை ரூ.4585-க்கும், ஒரு சவரன் ரூ.36,680 க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.39,552க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சரிந்து வருகிறது. இது நகை பிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை ரூ.1.10 குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.75.50 க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.75,500 ஆக உள்ளது.

எனவே, தங்க நகை வாங்க விரும்புவர்கள் இன்று வாங்க நல்ல வாய்ப்பு....

From around the web

Trending Videos

Tamilnadu News