×

ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்கள் - இன்று முதல் டோக்கன் வினியோகம்

 
profession

தமிழகதில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரசி கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 4 ஆயிரம் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து 2 ஆயிரம் கொடுக்கப்பட்டுவிட்டது. மீதி 2 ஆயிரம் விரைவில் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. அதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று துவங்கியது. டோக்கன் வழங்கும் பணி பல மாவட்டங்களிலும் நேற்றே துவங்கிவிட்ட நிலையில், இன்று சென்னையில் துவங்கியுள்ளது.  இன்று முதல் ஜூன் 4ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News