×

தத்துப்பிள்ளைக்கு காசநோய் … கண்டுகொள்ளாத பெற்றோர் – கைகொடுத்த நண்பர்கள் !

கோயம்புத்தூரில் கல் குவாரியில் வேலைப்பார்க்கும் முத்துபாண்டி என்ற இளைஞருக்கு காசநோய் இருப்பதை அறிந்து அவரைக் கைவிட்டுள்ளனர் அவரைத் தத்து எடுத்தவர்கள். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்களுக்கு குழந்தை இல்லாததால் முத்துப்பாண்டி என்ற குழந்தையை தத்து எடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதன் பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறந்ததால் முத்துப்பாண்டிக்கு தாய் தந்தையரின் பழைய பாசம் கிடைக்காமல் போயுள்ளது. இதனால் மனமுடைந்த முத்துப்பாண்டி பெற்றோரிடம் இருந்து விலகிச் சென்று கோவையில் உள்ள ஒரு கல்குவாரியில் வேலை செய்து
 
தத்துப்பிள்ளைக்கு காசநோய் … கண்டுகொள்ளாத பெற்றோர் – கைகொடுத்த நண்பர்கள் !

கோயம்புத்தூரில் கல் குவாரியில் வேலைப்பார்க்கும் முத்துபாண்டி என்ற இளைஞருக்கு காசநோய் இருப்பதை அறிந்து அவரைக் கைவிட்டுள்ளனர் அவரைத் தத்து எடுத்தவர்கள்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்களுக்கு குழந்தை இல்லாததால் முத்துப்பாண்டி என்ற குழந்தையை தத்து எடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதன் பிறகு அவர்களுக்குக் குழந்தை பிறந்ததால் முத்துப்பாண்டிக்கு தாய் தந்தையரின் பழைய பாசம் கிடைக்காமல் போயுள்ளது.

இதனால் மனமுடைந்த முத்துப்பாண்டி பெற்றோரிடம் இருந்து விலகிச் சென்று கோவையில் உள்ள ஒரு கல்குவாரியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட பரிசோதித்ததில் அவருக்கு காசநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக கல் குவாரியில் வேலை செய்யும் நபர்கள், முத்துப்பாண்டியை தத்தெடுத்தவர்களுக்கு அழைத்து விவரத்தை சொல்ல அவர்கள் அவனை இங்கே அனுப்பவேண்டாம் என சொல்லியுள்ளனர்.

இதையடுத்து முத்துப்பாண்டியின் நண்பர்கள் அவருக்கு என்று ஒரு வீடமைத்துப் பார்த்துக்கொள்ள இந்த விஷயம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டு இப்போது முத்துப்பாண்டிக்கு தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News