×

ரேஷன் கடையில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 எப்போது? - இதே புதிய அப்டேட்...

 
ration card

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்தது. தற்போது திமுக வெற்றி பெற்று ஆட்சியில் வந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில், குடும்ப தலைவிகளுக்கு 1000 வழங்கும் திட்டம் எப்போது துவங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி விளக்கமளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ‘தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவகிறார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அளிப்பது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும்’ என ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News