×

ஊரடங்கு நீட்டித்தாலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? - முதல்வர் ஆலோசனை

 
lockdown

தமிழகத்தில் 2வது கொரோனா அலை காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலரும் உயிரிழந்துவிட்டனர். எனவே, இதை கட்டுப்படுத்துவதற்காக தமிழகதில் முதலில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்களில் பலரும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. எனவே, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அமுல்படுத்தியுள்ளது. அந்த ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா குறையவில்லை எனில் மீண்டும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிப்பது பற்றியும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கு விதிகளை கடுமையாக அமுல்படுத்துவது பற்றியும் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News