Connect with us
banner

மில்க் பியூட்டி தமன்னாவின் நிலமை இப்படி ஆச்சே., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!

Cinema News

மில்க் பியூட்டி தமன்னாவின் நிலமை இப்படி ஆச்சே., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோயின் களமிறங்கினால் அதிகபட்சம் ஒரு ஐந்து வருடம் அந்த ஹீரோயின் அந்த ஃபீல்டில் இருப்பார். ரசிகர்கள் மனதில் இருப்பார். அதன்பிறகு புது ஹீரோயின் வந்து விடுவார்கள். பழைய ஹீரோயின்கள் காணாமல் போய்விடுவர். இது வழக்கமான ஒன்றுதான்.

tamannah

ஒரு சில ஹீரோயின்கள் மட்டுமே ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவர். அதில் ஒருவர் தமன்னா, இவர் ஆரம்பத்தில், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி என பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது குறும்புத்தனமான நடிப்பும் கவர்ச்சிகரமான உடல் கட்டமைப்பும் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.

அதனால், இவர் சில வருடங்கள் கழித்து தமிழில் நடித்தால் கூட ரசிகர்கள் நினைவில் கொள்வார்கள். ஆனால், ஏனோ தற்போது படவாய்ப்புகள் எதுவும் இன்றி தமன்னா தவித்து வருகிறார் போல, அவர் ஹீரோயினாக நடிக்கும் ஒரு படத்தின் அப்டேட் கூட இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படியுங்களேன் – கூட்டத்தில் கெட்ட வார்த்தை பேசிய ஹரி.! **ம்மால தூக்கி போட்டு மிதிச்சிருவேன்., அதிர்ந்து போனது அரங்கம்.!

இந்த சமயத்தில்தான் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் ஒரு புதிய படத்தில் தமன்னா அவருக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி வெளியாகியது.  பாலகிருஷ்ணா படத்தில் ஹீரோயினுக்கு பெரிய வேலை எதுவும் இருக்காது. பாலகிருஷ்ணாவை காதலிக்க வேண்டும். ஓரிரண்டு பாடல்களில் அவருடன் சேர்ந்து கவர்ச்சி ஆட்டம் ஆட வேண்டும். இந்த அளவுக்கு தான் கதாநாயகிகள் அவரது படத்தில் உபயோகப்படுத்த பட்டு வருகின்றன. அவரது படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top