டீ கப் தீண்டாமை பேசி ட்ரோலில் சிக்கிய பா.ரஞ்சித்!.. தங்கலான் ரிலீஸ் நேரத்தில் இது தேவையா?..
முன்பெல்லாம் பிரபலங்களில் யாராவது ஒரு கருத்தை சொன்னால் அது பத்திரிகைகளில் தான் தெரியும். அதைப் பெரிய அளவில் வைரலாக்க மாட்டார்கள். இப்போது இணையதளம் வந்ததும் நெட்டிசன்கள் யார் என்ன சொல்வார்கள்? எப்போது வச்சி செய்யலாம் என காத்திருக்கின்றனர். அதனால் யாராக இருந்தாலும் அவர்களிடம் தப்பிக்க முடியாது. அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் விதிவிலக்கல்ல. அவர் என்ன சொன்னார்னு பார்க்கலாமா...
தமிழ்ப்படங்களில் சாதிய இயக்குனர்கள் பட்டியலைப் புரட்டிப் பார்த்தால் அங்கு தவறாமல் மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் இருப்பார்கள். அவரது படங்களே அதற்கு சாட்சி. மாமன்னன், கர்ணன், மெட்ராஸ், கபாலி, காலா, தங்கலான் என்று இவர்களது படங்களைப் பார்த்ததுமே நாம் இனம் கண்டு கொள்ளலாம். இந்தப் படங்களை எடுத்துக் கொண்டால் ஒடுக்கப்பட்ட ஒரு பிரிவினரைப் பற்றியே படத்தின் கதை நகரும் வகையில் பின்னப்பட்டு இருக்கும்
தற்போது தீண்டாமையைப் பற்றி பா.ரஞ்சித் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது. பேப்பர் கப்ல டீ குடிக்கிறது கூட தீண்டாமை தான். தீண்டாமை இப்ப நவீனமா மாறிடுச்சு. தனித்தனி டீ கிளாஸ்ல இருந்த தீண்டாமை இப்ப பேப்பர் கப்புக்கு மாறிருக்கு.
அதை குடிச்சிட்டு அப்டியே தூக்கி போட்டுடலாம். யாரும் அதுல குடிக்க வேண்டியதில்ல. இப்டி தீண்டாமை வேற ஒரு வடிவமா மாறிடுச்சு என்று தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்களில் சிலர் பேப்பர் கப் சுகாதாரமானவை தானே? இன்னொருத்தர் குடிச்ச எச்சி கிளாஸ்ல தான் வேணுமான்னு கேட்டு அவரது கருத்துக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தற்போது ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்புடன் நடித்து வரும் தங்கலான் படத்தின் கதையும் அதே போன்றது தான். ஒரு ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்திற்காக அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த இளைஞன் பாடுபடுகிறான்.
அந்தப் படத்தைப் பற்றி விக்ரம் சொல்லும்போது நான் நடித்த படங்களிலேயே இந்தப் படத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன் என்றார். அதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. இந்தப்படம் நாளை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.