நிஜமாகவும், சினிமாவிலும் டாட்டூஸ் குத்திக்கொண்ட நடிகர்கள்

indian kamal and oormila
அந்தக்காலத்தில் பச்சை குத்தி வருகிறார்கள். இதைத் தான் ஆங்கிலத்தில் டாட்டூஸ் என்கிறார்கள். இப்போது டிசைன்ஸ் அதிகமாக வந்துள்ளன. நடிகைகள் தங்கள் உடலில் ரகசியமாகப் பச்சைக்குத்திக் கொள்கிறார்கள்.
குறிப்பாக காதலர்கள் தங்கள் ஜோடியின் பெயரை கையில் குத்திக்கொள்வார்கள். தமிழ்ப்பட நடிகர்களும் இந்த டாட்டூஸ்சை தங்கள் கையில் போட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரைப் பார்க்கலாம்.
அசோக்செல்வன்

ashok selvan
அசோக்செல்வன் தனது கையில் அச்சமில்லை என்ற டாட்டூவை குத்திருக்கிறார். இவர் மகாகவி பாரதியாரின் தீவிர ரசிகர் என்பதால் அவர் எழுதிய அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடலின் முதல் வார்த்தையைத் தன் கையில் டாட்டூவாகக் குத்தியிருக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி

rj balaji
ஆர்.ஜே.பாலாஜி தனது கையில் மைக்கை பச்சையாகக் குத்திருக்கிறார்கள். தனது தொழில் ஆன்கர் என்பதால் அதை எப்போதும் நேசிக்கும் பொருட்டு இந்த பச்சையைக் குத்தியுள்ளார்.
கமல்ஹாசன்

aalavanthan kamal
இந்தியன் மற்றும் ஆளவந்தான் படங்களில் கமல் தனது முகத்தில் மற்றும் கைகளில் பச்சையைக் குத்தி கலக்கியிருப்பார். இந்தியன் படத்தில் கமல் முகத்தில் டிராகன் டாட்டூவையும், ஆளவந்தான் படத்தில் கையில் பாம்பு படத்தையும் வரைந்து இருப்பார். அப்போதுதான் இந்த டாட்டூ என்றால் என்ன என்றே தெரிய வந்தது. அதன் பின்னர் வெளியான பல படங்களில் நடிகர்கள் தங்கள் உடலில் பச்சைக் குத்தி நடித்து வந்தார்கள்.
கடாரம் கொண்டான்

kadaram kondan vikram
நடிகர் விக்ரம் கமல் தயாரிப்பில் வெளியான கடாரம் கொண்டானில் தனது தோள்பட்டையில் டாட்டூவைப் போட்டு மிரட்டியிருப்பார்.
விக்ரம் நிஜமாக செயின் டாட்டூவை தன் கையில் விக்ரம் குத்தியிருக்கிறார். இவரது மகன் துருவ் விக்ரமும் அவரது அப்பா பெயரைக் கையில் டாட்டூவாகக் குத்தியுள்ளார்.
அனிருத்

aniruth
இசை அமைப்பாளர் அனிருத் மியூசிக் நோட் எடுக்கற டாட்டூவை தனது கையில் குத்தியிருக்கிறார். இவர் தனது தொழில் மேல் உள்ள பக்தி காரணமாகவும் அதை எப்போதும் நேசித்து வருவதையும் குறிக்கும் வகையில் இந்தப் பச்சையைக் குத்தியுள்ளார். இதன்பிறகு மியூசிக் மேல் ஆர்வம் கொண்ட இவரது ரசிகர்களும் இந்தப் பச்சையைக் குத்தியுள்ளார்கள்.
சுஷாந்த் சிங்

sushanth singh
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் முதன் முறையாக தனது முதுகில் டாட்டூ பஞ்ச பூதங்களை உள்ளடக்கி அதுல நானும் எங்க அம்மாவும் என்ற அர்த்தத்தில் டாட்டூவாகக் குத்தியிருக்கிறார். தனது அம்மாவின் நினைவாக இந்த பச்சையைக் குத்தியிருக்கிறார்.