×

வேலவன் ஸ்டோர்ஸில் அர்ச்சனா.. கலகலப்பான ஷாப்பிங் வீடியோ....

 
வேலவன் ஸ்டோர்ஸில் அர்ச்சனா.. கலகலப்பான ஷாப்பிங் வீடியோ....

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. 

ஏழு அடுக்கு மாடி கொண்ட இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் ஒரே இடத்தில் கிடைக்கிறது. கடந்து சென்ற தீபாவளி, புது வருடம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான சலுகைகளை வேலவன் ஸ்டோர்ஸ் அறிவித்தது எனவே,  பண்டிகைக்கான துணிகளை குடும்பம் குடும்பமாக சென்று வேலவன் ஸ்டோர்ஸில் பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதோடு,  வேலவன் ஸ்டோர்ஸுக்கு டிவி பிரபலங்கள் பலரும் விசிட் செய்து அங்கு தங்கள் குடும்பத்தினருக்கு பர்ச்சேஸ் செய்து வருகின்றனர்.

archana

சில நாட்களுக்கு முன்பு குக் வித் கோமாளி புகழ்,  பாலா, தங்கதுரை, சிவாங்கி, வனிதா விஜயகுமார், தீபா, கலக்கப்போவது யாரு புகழ் வினோத், ஜாக்குலின், விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலை அவரின் கணவர் உசைன் மற்றும் மைனா நந்தினி, அவரின் கணவர் லோகோஷ் ஆகியோர் வேலவன் ஸ்டோர்ஸுக்கு விசிட் அடித்தனர். அதன்பின் வனிதா விஜயகுமார் தனது தோழி உமா ரியாஸ் கானுடன் இணைந்து வேலவன் ஸ்டோர்ஸ்க்கு சென்று ஷாப்பிங் செய்தார்.

archan a

அங்கு ஏராளமான கலெக்‌ஷன்களை கண்டு ஆனந்தமடைந்த அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினர். அதோடு, அங்கிருந்த அனைவரிடமும் ஜாலியாக பேசி கடையை கலகலப்பாக மாற்றி சென்றனர்.தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் வருகை தருவதால் இது பிரபலங்களின் ஃபேவரிட் கடையாக மாறியுள்ளது. 

archana

இந்நிலையில், தொலைக்காட்சி தொகுப்பாளினியும், பிக்பாஸ் பிரபலமும் ஆன அர்ச்சனா வேலவன் ஸ்டோர்ஸ்க்கு விசிட் செய்து ஷாப்பிங் வேட்டை நடத்தியுள்ளார்.  அங்கு பல டிசைனில், அழகழகான புடவைகள் இருப்பதை கண்ட அவர் ஆர்வமுடன் பர்ச்சேஸ் செய்தார். அங்கு பணிபுரியும் பெண்களுடன் ஜாலியாக அரட்டை அடித்து கடையையே கலகலப்பாக மாற்றினார்.

இது தொடர்பான வீடியோ உங்கள் பார்வைக்கு...

From around the web

Trending Videos

Tamilnadu News