வேலவன் ஸ்டோர்ஸில் பர்ச்சேஸ் செய்த நந்தினி... செம கலாட்டா வீடியோ..

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது.
ஏழு அடுக்கு மாடி கொண்ட இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் குறைந்த விலையில் ஒரே இடத்தில் கிடைக்கிறது. கடந்து சென்ற தீபாவளி, புது வருடம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு ஏராளமான சலுகைகளை வேலவன் ஸ்டோர்ஸ் அறிவித்தது எனவே, பண்டிகைக்கான துணிகளை குடும்பம் குடும்பமாக சென்று வேலவன் ஸ்டோர்ஸில் பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதோடு, வேலவன் ஸ்டோர்ஸுக்கு டிவி பிரபலங்கள் பலரும் விசிட் செய்து அங்கு தங்கள் குடும்பத்தினருக்கு பர்ச்சேஸ் செய்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு குக் வித் கோமாளி புகழ், பாலா, தங்கதுரை, சிவாங்கி, வனிதா விஜயகுமார், தீபா, கலக்கப்போவது யாரு புகழ் வினோத், ஜாக்குலின், விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் அவரின் கணவர் உசைன் ஆகியோர் வேலவன் ஸ்டோர்ஸுக்கு விசிட் அடித்தனர்.
அங்கு ஏராளமான கலெக்ஷன்களை கண்டு ஆனந்தமடைந்த அவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினர். அதோடு, அங்கிருந்த அனைவரிடமும் ஜாலியாக பேசி கடையை கலகலப்பாக மாற்றி சென்றனர்.தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் வருகை தருவதால் இது பிரபலங்களின் ஃபேவரிட் கடையாக மாறியுள்ளது.
இந்நிலையில், இவர்களை தொடர்ந்து விஜய் டிவி புகழ் மைனா நந்தினி தனது கணவர் லோகேஷுடன் இணைந்து ஷாப்பிங் செய்தார். அப்போது, அவர்கள் இருவரும் கடை ஊழியர்களிடம் ஜாலியாக பேசி ஷாப்பிங் செய்தனர். அதோடு, யாரும் பார்க்காத நேரத்தில் சில பொருட்களை ஆட்டையை போடவும் முயன்றனர்.