×

மாஸ் பக்கா மாஸ்...ஒரு டாபிக்கையும் விடல... யுடியூப்பில் கலக்கும் ‘மைக்செட்’ 

 

இளைஞர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், நிரூபிக்கவும் தற்போது யுடியூப் சேனல் பெரும் உதவியாக இருக்கிறது. ஆனால், எல்லோரும் அதில் வெற்றி பெறுவதில்லை. அதேசமயம் ‘மைக்செட்’ யுடியூப் சேனல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

புதுச்சேரியில் செயல்படும் இந்த யுடியூப் சேனலை ஸ்ரீராம் என்பவர் சிறப்பாக நடத்தி வருகிறார். பல தலைப்புகளில் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக தேர்வு, நேர்முகத்தேர்வு, திருமணம் என இளைஞர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அத்தனை விஷயங்களையும் அழகாக, ரசிக்கும் வகையில் சில நிமிட வீடியோக்களாக இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும், கொரொனா விழிப்புணர்வு, மருத்துவமனைகளில் நடக்கும் தவறுகள், தல தீபாவளி என அனைத்து விஷயங்களையும் கலந்து கட்டி  அடிப்பதால் நெட்டிசன்களிடையே ‘மைக்செட்’ யுடியூப் சேனல் நெருக்கமான ஒன்றாக மாறியுள்ளது. 5.23 மில்லியன் பார்வையாளர்கள் இந்த யுடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளதே இதற்கு சாட்சி.

இவர்களின் ஒவ்வொரு வீடியோவும் பல மில்லியன் பேர் பார்த்து ரசித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இந்த யுடியூப் சேனலை நடத்தும் ஸ்ரீராம் பல்வேறு கல்லூரிகளுக்கும் அழைக்கப்பட்டு வருகிறார். அங்கு செல்லும் அவரின் குழு கலாச்சார விழாக்களை நடத்தி வருகின்றனர். மலேயா மற்றும் மலேசியா பல்கலைக்கழகங்களும் இவரை அழைத்துள்ளன. மேலும், ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்கிற திரைப்படத்திலும் நடித்துள்ளனர்.

வீடியோவை வெளியிடுவது மட்டுமில்லாமல் பல்வேறு சமூக நல செயல்பாட்டிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். 2018ம் ஆண்டு தமிழகம் வெள்ளத்தால் அவதிப்பட்டபோது தஞ்சாவூர் பகுதியில் மக்களுக்கு இலவசமாக உணவுகளை அளித்தனர். மேலும், புகைப்பிடித்தல்  மற்றும் குடிப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வுகளை ஸ்ரீராம் ஏற்படுத்தி வருகிறார்.

micset

அதோடு, எடிட்டிங், ஒளிப்பதிவு, கதை எழுதல் ஆகிய திறமைகளை கொண்ட வாலிபர்களுக்கும் வேலை வாய்ப்பை இவர்கள் அளித்து வருகின்றனர். முழுக்க முழுக்க இந்த யுடியூப் சேனல் 30 வயதிற்கு கீழ்பட்ட வாலிபர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

https://www.youtube.com/results?search_query=micset

sriram

கொரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருந்த போது அந்நோயிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது, ஊரடங்கு மற்றும் அலுவகத்தில் சந்திக்கும் பிரச்சனைகள், கல்லூரி தேர்வுகள் என அனைத்து விஷயங்களையும் அவர்கள் தங்கள் வீடியோவில் பதிவு செய்திருந்தனர்.

https://www.facebook.com/micsetchannel/?__tn__=%2Cd%2CP-R&eid=ARD-GQShDitx33zHj52ojwn5HH8cYahleJQHLoe0Din3c0EcDoXsVK7-l6QF08EeTGKEwwQ8uCqAyc1z

இதனால்தான் என்னவோ இவர்களின் வீடியோ நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News