பாஸ்வேர்ட் சொன்ன எம்.ஜி.ஆர்!.. அள்ளிக்கொடுத்த 'ஆளவந்தான்'!... கையிலெடுத்த 'கோச்சடையான்'!

by Sankar |
mgr,rajini,kamal
X

mgr,rajini,kamal

சினிமாத்துறையில் நாளுக்கு நாள் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றது. ரசிகர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றார் போல மாறினால் தான் வெற்றி காண முடியும் என்பதனை நன்கு புரிந்து வைத்துள்ள படைப்பாளிகள் இவ்வாறு செய்து வருகின்றனர்.

ஆனால் தொழில்நுட்பம் சற்று குறைவாக இருந்த காலத்திலேயே நவீனமயத்தை நோக்கி சென்று உலக சினிமாவை முன்னோடியாக திகழ வைத்தவர்கள் தமிழ் சினிமாவின் படைப்பாளிகள். 'ஹாலிவுட்'., 'பாலிவுட்' என எந்த 'வுட்'டாக இருந்தாலும் பிரம்மாண்டம் என்றால் எப்படி இருக்கும் என்பதனை உலகிற்கு எடுத்துக்காட்டிய படம் "சந்திரலேகா". 'எஸ்.எஸ்.வாசன்' இயக்கத்தில் வந்த இப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் உறைய வைத்தது. பல பிரம்மாண்டமான காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

அதோடு மட்டுமல்லாமல் 'எம்.ஜி.ஆர்'. நடிப்பில் வெளிவந்த "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" படம் தான் முதல் கலர் திரைப்படம். அந்த படத்தில் "அண்டா கா கசம், அபு காகுகும்" என "பாஸ்வேர்ட்" சொல்லி கதவை திறக்கவைத்து, "பாஸ்வேர்ட்" டெக்னலாஜியை அறிமுகப்படுத்திய பெருமை தமிழ் சினிமாவையே சாரும்.

mgr1

mgr1

"மைக்கேல் மதன காமராஜன்" படத்தில் மதன் கதாப்பாத்திரம் தான் முதன் முதலில் 'லேப்டாப்' என்றால் எப்படி இருக்கும் என்பதனை தமிழ் ரசிகர்களுக்கு காட்டிய திரைப்படம். அதனை போலே கமலின் "குருதிப்புனல்" படம் தான் முதன் முதலாக 'டி.டீ.எஸ்', தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.

kamal1

kamal1

"ஆளவந்தான்" படத்தில் வசனம் காட்சி அமைக்கப்பட்ட போது பதியப்பட்ட ஆடியோவே டப்பிங் இன்றி படத்தில் வைக்கப்பட்டது. "மும்பை எக்ஸ்பிரஸ்" படத்தில் நவீன கேமராவின் மூலமாக காட்சி அமைப்பு அறிமுகப்படுத்தபட்டது. "மோஷன்" பிக்சர் நுட்பமும் இந்த படத்தின் மூலம் தான் தெரியப்படுத்தப்பட்டது . ஆங்கில மொழி "அவதார்" படத்தில் இந்த தொழில்நுட்பம் காட்டப்பட்ட போதிலும் முதல் ஆளாக இதனை கையில் எடுத்தது கமலஹாசன் தான்.

rajini1

rajini1

'ஆளவந்தானில்' ஒரு சில காட்சிகளில் இப்படி எடுக்கப்பட்டாலும், இந்த வகையான தொழில் நுட்பத்தை தனது படத்தில் முழுமையாக வைத்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவரது "கோச்சடையான்" படம் இந்த நுட்பத்திலேயே வெளிவந்தது. ரஜினியின் "மாவீரன்" படத்தின் பாடல்கள் தான் முதன் முதலில் 'ஸ்டீரியோ' ரிக்கார்டிங்கை அறிமுகப்படுத்தியது.

Next Story