அந்த நிகழ்ச்சில வைல்ட் கார்டு என்ட்ரியா? என்னால முடியாது? பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்த நடிகை....!

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் சேனல் தான் விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அத்தனை நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவிற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதுவரை இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது சீசனும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 8 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில் இந்த சீசனில் மட்டும் 10 போட்டியாளர்கள், 10 கோமாளிகள் பங்கேற்றனர். அதில் தற்போது வரை 2 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர்.
நிகழ்ச்சியில் எலிமினேஷன் தொடங்கி விட்டதால் வைல்ட் கார்டு என்ட்ரி குறித்த பேச்சு தற்போதே இணையத்தில் உலா வர தொடங்கி விட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விடுவதால் பலரும் இதில் பங்கேற்க போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது கோலிவுட்டில் இளம் நடிகையாக வளர்ந்து வரும் நடிகை தேஜூ அஸ்வினி இந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்கேற்பார் என கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் ஏற்கனவே ரோஷினி, அம்மு அபிராமி, வித்யூலேகா என நடிகைகள் உள்ள நிலையில் தற்போது தேஜூவும் பங்கேற்க உள்ளதால் குஷியில் இருந்தனர்.

Teju Ashwini
ஆனால் தேஜூவோ, "நோ குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நான் வரமாட்டேன். எனக்கு சமைக்கவே தெரியாது" என தனது சோசியல் மீடியா பக்கத்தில் தன் ரசிகர்களிடம் மிகவும் வெளிப்படையாக கூறி விட்டாராம். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.