1. Home
  2. Latest News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸுன் சம்பளம் இவ்வளவுதானாம்! கொஞ்சம் ஓவரா இல்லயா?


Balaji Murugadoss: பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். அதில் அவர் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் புகழை பெற்றார். தற்போது அவர் தன்னுடைய சம்பளம் குறித்து பேசி இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

100 நாட்கள் ஒரே வீட்டில் 60 கேமராக்கள் முன்னர் பிரபலங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வெளியானது தான் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. ஏற்கனவே பல மொழியில் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களை எப்படி கவரும் என ரசிகர்களை எதிர்பார்த்தனர்.

ஆனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்த கமல்ஹாசன் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி முதல் சீசன் ஒளிபரப்பானது. சாதாரண பிரபலங்கள் என்றாலும் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது.

தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 8 சீசன் கடந்து விட்டது. இதில் சில சீசனங்களில் கலந்து கொண்ட பிரபலங்கள் எப்போதுமே ரசிகர்கள் மனதில் அப்படியே இருப்பார்கள். அப்படி ஒரு பிரபலம் தான் பாலாஜி முருகதாஸ். தமிழ் பிக் பாஸ் சீசன் நாளில் கலந்து கொண்டார்.

அந்த சீசனில் மொத்தமுமே இவரை சுற்றியும் நடிகர் ஆரியை சுற்றியும் நிகழ்ச்சி சென்றது. பல இடங்களில் இவர் பேசிய வசனங்கள் தக் லைஃப் டயலாக மாறி ரசிகர்களிடம் அப்ளாஸை பெற்றது. ஆனாலும் இவரால் ஆரியிடம் வெல்ல முடியாமல் போனது.

அதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியில் அல்டிமேட் என்ற பெயரில் வெளியாகி அதில் தான் விட்ட டைட்டிலை தட்டி தூக்கினார். தற்போது இவர் நடிப்பில் ஃபயர் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் பாலாஜி முருகதாஸ் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதே ஒரு கோடி வரை சம்பளம் கிடைக்கும் என்பதற்கு தான். ஆனால் எனக்கு சம்பளமாக 45 லட்சம் மட்டுமே கிடைத்தது. சம்பளத்தை சொல்லக்கூடாது என்பார்கள். ஆனால் நான் சொல்வேன் எனவும் பேசி இருப்பது வைரலாகி வருகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.