வந்தாச்சு பிக்பாஸ் 8! கோடிகளை அள்ளும் கமல்..யாரெல்லாம் வர்றாங்க தெரியுமா?
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. கிட்டத்தட்ட 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்கி வருகிறார். எந்த சீசனிலும் இல்லாத அளவு சீசன் 7 தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. ஏனெனில் கடந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட அனைவரும் நிகழ்ச்சிக்காக தங்களை பிரிபேர் செய்து வந்திருந்தனர்.
அதிலும் பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும் அவரைத்தான் பிக்பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் என மக்கள் பேசி வந்தார்கள். அந்தளவுக்கு பிரதீப் ஆண்டனி ரசிகர்களை வென்றார் என்றுதான் சொல்லவேண்டும். அதன் பின்னர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலமாக உள்ளே வந்த அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
மணி இரண்டாம் இடத்திற்கு தகுதியானார். கடந்த சீசனில் புது புது விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. முற்றிலும் வித்தியாசமான விதிமுறைகளுடன் கடந்த சீசன் நல்ல படியாக மக்களிடையே ரீச் ஆனது. இந்த நிலையில் அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது.
அதற்கான வேலைகளில்தான் இப்போது இறங்கியிருக்கிறார்களாம். மேலும் இந்த சீசனிலும் சந்தேகமே இல்லாமல் கமல்தான் தொகுத்து வழங்க போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதற்காக கமல் 150 கோடி வரை சம்பளம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்தாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இதற்கான புரோமோ சூட் ஆரம்பித்து விடுவார்கள் என்றும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து அதற்கான செட் வொர்க் வேலைகள் ஆரம்பித்து விடுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
மேலும் இந்த சீசனில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் கூட சின்னத்திரை நடிகர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த சீசனை போல இந்த சீசனிலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தை புகுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.