ரிகர்ஷலுக்கே இப்படியா? திருமணத்திற்கு முன்பே பிக்பாஸ் பிரபலம் செய்யும் காரியத்தை பாருங்க

by ராம் சுதன் |

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷாரிக். இவர் பிரபல நடிகர் ரியாஸ்கானின் மகன் ஆவார். ரியாஸ்கான் பிரபல நடிகை கமலா காமேஷின் மகள் உமா ரியாஸை திருமணம் செய்து கொண்டவர். ஷாரிக் மட்டுமில்லாமல் இவர்களுக்கு இன்னொரு மகனும் உள்ளார்.

ஷாரிக்கு திருமணம் நடைபெற போவதாக இணையதளத்தில் செய்திகள் பரவியது. ஆனால் தன் மகனின் திருமணம் குறித்து சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் உமா ரியாஸ் இதைப் பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால் ஷாரிக்கின் திருமணம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறப் போவதாக சொல்லப்படுகிறது.

சென்னையில் உள்ள பெரிய ஸ்டார் ஹோட்டலில் ஷாரிக்கின் திருமணம் நடைபெற இருக்கிறதாம். அதற்கான விழா ஏற்பாடுகள் தான் இப்போதே இருந்தே நடந்து வருகிறது. அதில் மெகந்தி விழா இப்போது நடைபெற்று வருகிறது. அது சம்பந்தமான வீடியோதான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் ஷாரிக் திருமணம் செய்யப் போகும் பெண் தன் கைகளில் ஷாரிக்கும் அவரும் உதட்டோடு உதடாக முத்தம் கொடுப்பது மாதிரி மெகந்தியில் வரைந்திருக்கிறார். அதற்கு உண்மையிலேயே ஷாரிக் அவருடைய வருங்கால மனைவிக்கு முத்தம் கொடுத்து போஸ் கொடுக்க அதை பார்த்து மெகந்தியில் வரைவது மாதிரி அந்த வீடியோவில் பதிவாகியிருக்கின்றது.

இதை பார்த்த பல பேர் கொஞ்சம் ஓவராத்தான் போறீங்கடா என்று கூறி வருகிறார்கள். ரியாஸ்கான் பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். உமா ரியாஸ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஷாரிக்கும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அனிதா சம்பந்துடன் ஜோடி சேர்ந்து ஆடி அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார் ஷாரிக். அதில் இருந்தே படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு வந்தது. இப்போது திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார் ஷாரிக்.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/C-R8wHcPTuT/?igsh=c3FqMnUwemc1a2Np

Next Story