`வணக்கம் நேயர்களே… நான் உங்க உமா பேசுறேன்’ – இந்த டயலாக்கை 90ஸ் கிட்ஸ் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. சன் டிவியில் ஒளிபரப்பான பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பெப்ஸி உமாவுக்கு ஒரு செலிபிரெட்டி அந்தஸ்து இருந்தது அன்றைய காலகட்டங்களில்… இதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் தீனா படத்தில் அஜித்தும் அவரின் தங்கையும் பெப்ஸி உமாவோடு பேசுவது போன்ற காட்சி.
இப்படி புகழ்பெற்றிருந்த உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சிக்கு உமா எப்படித் தேர்வானார் தெரியுமா… பெப்ஸ் உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சிக்கு முன்பே நூறு எபிசோடுகள் ஒளிபரப்பான இன்னொரு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் உமா தொகுத்து வழங்கியிருக்கிறார்.
பக்கா சென்னைப் பொண்ணான உமா, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தூர்தர்ஷனில் நிகழ்ச்சி ஒன்றின் ஷுட்டிங் பார்க்கப் போயிருக்கிறார். இவரைப் பார்த்த அந்த நிகழ்ச்சியின் இயக்குநர், வேறொரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பை உமாவுக்கு வழங்கினார். அதுதான், தூர்தர்ஷனில் 100 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான `வாழ்த்தலாம் வாருங்கள்’ நிகழ்ச்சி.
அதன்பின்னர், சன் டிவியில் பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. உடை, பேசும் தொனினு எதுலயும் நீங்க தலையிடக் கூடாது என்கிற கண்டிஷனோடுதான் நிகழ்ச்சிக்குள் போயிருக்கிறார்.
உமா தொகுத்து வழங்கிய பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி சன் டிவியில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயம், அவருக்குக் கோயில் கட்டியதாகத் தகவல் வெளியானது. அப்போது இந்த செய்திக்கு பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ், `பெப்ஸி உமா என்ன சாதிச்சுட்டாங்க… அவருக்குக் கோயில் கட்டுனா தமிழ்நாடே அழிஞ்சுபோயிடும்’ என்று விமர்சித்திருந்தார்.
அதேபோல், ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பையும் உமா மென்மையாக மறுத்திருக்கிறார். ரஜினியின் முத்து படத்தில் ஹீரோயின் வாய்ப்பு பெப்ஸி உமாவுக்குத்தான் முதலில் வந்திருக்கிறது. ஆனால், சினிமாவில் நடிக்கும் எண்ணம் எதுவுமில்லை என்றுகூறி அதை மென்மையாக மறுத்துவிட்டாராம்.
அதேபோல், இந்தி சினிமாவில் மிகப்பெரிய இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த சுபாஷ் காய், பெப்ஸி உமாவை ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவில் சந்தித்திருக்கிறார். ஷாருக்கானை வைத்து எடுக்கும் படத்தில் பெப்ஸி உமாவை நடிக்க வைக்க ஆசைப்பட்ட அவர், `உங்க வீட்டுக்கே வர்றேன். 20 நிமிஷம் டைம் கொடுங்க. உங்களை என் படத்தில் நடிக்க சம்மதிக்க வைக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், மீட்டிங் முடிவில், படத்தில் நடிக்க மாட்டேன் என்பதை அவருக்குப் புரிய வைத்து அனுப்பியிருக்கிறார் உமா.ரஜினி, ஷாருக்குடன் ஹீரோயின் வாய்ப்பை மறுத்த பெப்சி உமா… அந்த நிகழ்ச்சிக்குள் வந்தது இப்படித்தான்?
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…