திருமண நாளை அறிவித்த பிக்பாஸ் காதல் ஜோடி... ஆனா இது நல்லா இருக்கே?
Biggboss: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் காதலித்த அமீர் மற்றும் பாவ்னி இருவரும் தங்களுடைய திருமண அறிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவ்னி ரெட்டி. சின்ன தம்பி உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்து வந்த பாவ்னி தன்னுடன் நடித்த பிரதீப் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.
அவரும் சீரியல்களில் நடித்து வந்தவர். திடீரென தற்கொலை செய்து கொண்டார். அதை தொடர்ந்து பாவ்னி சீரியல்களில் நடிப்பதை நிறுத்தினார். தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் உள்ளே வந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் அவருக்கு ரசிகர்களிடம் பெரிய அளவு ஆதரவு கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்தவர் தான் டான்ஸ் மாஸ்டர் அமீர்.
அவர் அப்போதே பாவ்னியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் உடனடியாக ஒப்புக்கொள்ளவில்லை. அதை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகளின் டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் இதை சொல்லிக்கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் அவர் காதலுக்கு ஓகே சொன்ன பாவ்னி இருவரும் லிவிங்கில் கடந்த மூன்று வருடமாக வாழ்ந்து வருகின்றனர். ஒருவழியாக அதற்கு முழுக்கு போட்டு தம்பதிகளாக மாற முடிவெடுத்து இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பாவ்னி மற்றும் அமீர் இருவரும் வரும் ஏப்ரல் 20ந் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். தங்களுடைய காதல் வாழ்க்கையை விவரித்து போட்டிருக்கும் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.