சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரையில் ரவுண்ட் வரும் அம்மணி செய்யும் ஓவர் சேட்டை!...
கலர்ஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அறிமுகமானவர் அபர்ணதி. ஒரு படம் மட்டுமே ஓரளவு வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில் அம்மணி கொடுக்கும் அராஜகம் குறித்து தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா தனக்கான மணப்பெண்ணை தேர்ந்தெடுக்க பலதரப்பட்ட தேர்வுக்கு பின்னர் முதல் எட்டு பேரை நிகழ்ச்சிக்குள் அழைத்து வந்தார். இதில் முக்கிய இடம் பிடித்திருந்தால் அபர்ணதி. கிட்டத்தட்ட தன்னை ஆர்யாவின் காதலியாகவே நிகழ்ச்சி முழுவதும் காட்டிக்கொண்டார்.
அவரை வெளியேற்றும் போது கூட உண்மையான காதலன் பிரேக் அப் செய்து அனுப்புவது போல அவர் போட்ட ட்ராமா ஓவர் மோடில் சென்றது. இதை எடுத்து இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பெயரை அபர்ணதி ஆர்யா என்றே இன்னமும் வைத்திருக்கிறார். தற்போது சினிமாவிலும் அபர்ணதி பிசியாக நடித்து வருகிறார்.
அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான இறுகப்பற்று திரைப்படம் மிகப்பெரிய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அபர்ணதி தற்போது பட குழுவிற்கு ஓவராக தொல்லை கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது இயக்குனர் ஸ்ரீ வெற்றி இயக்கத்தில் நாற்கரபோர் திரைப்படத்தில் 12 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் ஹீரோயின் அபர்ணதி மட்டும் கலந்து கொள்ளவில்லை. அது குறித்து பேசிய சுரேஷ் காமாட்சி, இப்படத்தின் தயாரிப்பாளர் அபர்ணதியை விழாவிற்கு அழைத்து இருக்கிறார். ஆனால் அதற்கென தனியாக காசு கொடுத்தால்தான் வர முடியும் என கூறினார். உடனே நானும் அவருக்கு கால் செய்து அழைத்துப் பார்த்தேன்.
என்னிடமும் அதே கதையை தான் கூறினார். நான் நடிகர் சங்கத்தில் புகார் கொடுப்பதாக கூறினேன். நான் சங்கத்தில் உறுப்பினரே இல்லை என்றார். மூன்று லட்சம் கொடுத்தால் வருவேன் இல்லை என்றால் முடியாது என மறுத்துவிட்டார். நானும் நீங்கள் வரவேண்டாம். மூன்று லட்சத்தை வேறு ஏதாவது நல்ல விஷயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளட்டும் எனக் கூறி போனை வைத்து விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.