ஹீரோ சான்ஸும் கிடைக்கலை… அப்போ என்ன செய்ய விஜய் டிவிக்கு திரும்பும் அசீம்…
பிக் பாஸ் தமிழ் சீசனில் வெற்றியாளரான நடிகர் அசீம் தற்போது மீண்டும் சீரியல் பக்கம் தலை காட்டியிருக்கிறார். இது குறித்து மேலும் புதிய அப்டேட்கள் வெளியாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சன் டிவியில் மூலம் நடிகராக அறிமுகமானவர் அசீம். பின்னர் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தவருக்கு விஜய் தொலைக்காட்சி கடைக்குட்டி சிங்கம் சீரியலில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கொடுத்தது. அதில் தன்னுடன் இணைந்து நடித்த சிவானி நாராயணனுடன் அசீம் காதல் வயப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டார் என்ற தகவல்களும் சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் சீசனில் எண்ட்ரி கொடுத்தார். அதுவரை தமிழ் சீசனில் அமைதியாக சண்டை போடும் போட்டியாளர்களை வெற்றியடைந்த நிலையில் தன்னுடைய புதிய ஸ்டேடர்ஜியால் அசீம் ஒவ்வொரு வாரமும் கணிசமான ஓட்டுகளை வாங்கி குவித்தார்.
மேலும் அவருக்கு எல்லா போட்டியாளர்களும் எதிராக இருந்ததும் அவரின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க செய்தது. விக்ரமன், ஷிவானி என இருவரும் அசீமுக்கு கடும் போட்டியாக நிலவுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் அசீம் பிக் பாஸ் சீசன் வெற்றியாளர் ஆனார்.
இது கமலுக்கே பிடிக்கவில்லை என டிவி நிர்வாகத்தில் இருந்து கிசுகிசுக்கள் கிளம்பி இருந்தாலும் கமல் அசிமை நிகழ்ச்சியில் ஓவராக திட்டியதும். விக்ரமன் பக்கம் அதிகமாக சாய்ந்ததுமே அசீமிற்கு ஓட்டு வங்கி அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது. இதை எடுத்து ஹீரோவாக பெரிய திரையில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இருந்தும் இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், அசீமிற்கு கோலிவுட்டில் இருந்து பெரிய வாய்ப்புகள் எதுவும் வராமல் இருக்கிறது. இதனால் மீண்டும் சீரியல் பக்கம் எண்ட்ரியாக இருக்கிறார். அந்த வகையில், விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாக இருக்கும் சீரியலில் அசீம் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.