அய்யயோ!.. இவங்க பேசியே காலி பண்ணுவாங்களே… பாக்கியலட்சுமியில் எண்ட்ரியாகும் பிக்பாஸ் நடிகை..

Published on: July 17, 2024
---Advertisement---

Bakkiyalakshmi: தமிழ் சீரியலில் மிகவும் பிரபலமாக இருக்கும் பாக்கியலட்சுமி தொடர் இறுதிக்கட்டத்தினை நெருங்கும் என எதிர்பார்த்தால் அடுத்தத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது ஒரு பிக்பாஸ் நடிகை உள்ளே வர இருக்கிறாராம்.

தமிழில் கொரோனா காலத்திற்கு முன்னர் ஒளிபரப்பாக இருந்த சீரியல் பாக்கியலட்சுமி. சரியாக கொரோனா லாக்டவுன் வர அந்த சீரியலை ஒளிபரப்பாமல் சில மாதங்கள் கடந்தே வெளிவிட்டனர். கிட்டத்தட்ட 3 வருடங்களை கடந்து இந்த சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் நடிகை கஸ்தூரியை தான் முதலில் பாக்கியாவாக இந்த சீரியலில் நடிக்க கேட்டு இருந்தனர். ஆனால் ஏற்கனவே தமிழ் பிக்பாஸில் தன்னை தவறாக சித்தரித்து மக்களிடம் அவப்பெயர் வாங்கி கொடுத்தார்கள் எனக் காரணம் கூறி அவர் நடிக்க மறுத்துவிட்டார்.

பின்னர் இந்த வாய்ப்பு பிரியா ராமனிடம் சென்றது. அவர் அந்த நேரத்தில் ஜீ தமிழ் சீரியலில் ஒரு தொடரில் நடித்து வந்ததால் அவரும் நடிக்க முடியாமல் போனது. அதை தொடர்ந்து கன்னட நடிகை சுசித்ராவை பாக்கியாவாக களமிறக்கினார். ஆனால் அவர் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்.

கிட்டத்தட்ட அதிக நாட்கள் ஓடும் சீரியல் எனப் புகழ் பெற்று இருக்கிறது. சில நாட்களாகவே சீரியல் அதிரடியாக சென்றுக் கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இந்த சீரியலில் தொகுப்பாளினியும், நடிகையுமான அனிதா சம்பத்தினை களமிறக்க இருக்கின்றனர். அவர் நடிப்பால் இன்னும் சீரியல் புகழடையும் எனக் கூறப்படுகிறது.

சீரியல் குறித்து அடிக்கடி அப்டேட் கொடுக்கும் நடிகர் கோபி கூட இன்னும் சில காலம் என்னுடைய அழுகை மற்றும் கஷ்டத்தை தான் சீரியலில் பார்ப்பீர்கள் எனக் குறிப்பிட்டு இருப்பார். இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த அதிரடி திருப்பம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.