latest news
அடுத்த பிக்பாஸ் இருக்கட்டும்? சீசனை ஹிட்டடிக்க களமிறங்க இருக்கும் முன்னாள் போட்டியாளர்..
பிக்பாஸ் சீசன் 8 நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை உருவாக்கினாலும் அதை தக்கவைக்க தயாரிப்பு நிர்வாகம் தொடர்ச்சியாக வித்தியாச முயற்சிகளை எடுத்து வருகிறது.
பொதுவாக பிக்பாஸ் தமிழ் சீசன்கள் தொடக்கத்தில் மிகவும் தொய்வாகவே சொல்லும், ஆனால் கமலின் விலகலை எடுத்து பிக் பாஸ் 8 கல்லா கட்டுமா? என்ற சந்தேகமே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதை சமாளிக்க விஜய் டிவி தற்போது ஒரு புதிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.
ரியாலிட்டி ஷோக்களின் கிங்மேக்கராக இருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. இது தமிழில் ஹிட் அடிக்க மிக முக்கிய காரணம் கமல்ஹாசன் தான். எத்தனையோ கஷ்டமான காலத்தில் கூட அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து பின்வாங்கியதே இல்லை. ஆனால் சினிமாவை காரணம் காட்டி எட்டாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் வழங்கவில்லை என்பதை கமல் அறிவித்திருந்தார்.
இதனால் அடுத்த பிக் பாஸ் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் அவர் கமலின் வெற்றிடத்தை கொஞ்சம் ஆவது நிரப்ப வேண்டும். இதற்கு முன் தொகுத்து வழங்கிய சிலம்பரசன் தன் கோபத்தை கட்டுப்பாட்டிலே வைத்திருந்தார். ஆனால் பிக் பாஸ் ரசிகர்கள் தடாலடியாக பேசுவதையே விரும்புவார்கள். சிம்புவும் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவர் கண்டிப்பாக பிக் பாஸ் வரமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இன்னும் ஓரிரு தினங்களில் பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியிடப்பட வேண்டும். அதனால் இன்னும் ஓரிரு தினங்களில் விஜய் சேதுபதியை டிவியின் நிர்வாகம் ஒப்புக்கொள்ள வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, நிகழ்ச்சியை இன்னும் பரபரப்பாக இதற்கு முன் ஒளிபரப்பான சீசன்களில் மிகவும் பிரபலமாக இருந்த போட்டியாளர்களில் ஒரு சிலரை உள்ளே அனுப்ப குழு முடிவு எடுத்திருக்கிறதாம். இரண்டாவது வாய்ப்பை அவர்கள் பக்காவாக பயன்படுத்தி நிகழ்ச்சிக்கு இன்னும் சுவாரசியத்தை அதிகரிப்பார்கள். அவர்களின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்களை தெரிந்து கொண்ட மற்ற போட்டியாளர்கள் அவர்களை எவ்வாறு கையாளுவார்கள் எனவும் பார்ப்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர்.
கடந்த சீசனில் செய்த சில தவறுகளை இல்லாமல் இந்த சீசனை மற்ற சீசன்கள் போல மீண்டும் ரசிகர்களிடம் ஹிட் அடிக்க வேண்டும் என்பதில் விஜய் டிவி உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.