Connect with us

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளியேறிய முக்கிய பிரபலங்கள் காரணம் இதுவா?

latest news

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளியேறிய முக்கிய பிரபலங்கள் காரணம் இதுவா?

ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது குக் வித் கோமாளி. சமையல் நிகழ்ச்சிகளில் வித்தியாசம் காட்டி நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்தது. ஐந்தாவது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி சம்பவம் தான் நடந்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட்தான். ஆனால், விஜய் டிவியில் இருந்து மீடியா மேஷன் தயாரிப்பு நிறுவனம் வெளியேறிய நிலையில் வெங்கடேஷ் பட்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக அறிவித்தார்.

ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. வெங்கடேஷ் பட்டின் இடத்தை நிரப்ப வைரல் சமையல் கலைஞராக உலாவரும் மாதம்பட்டி ரங்கராஜ் புது தயாரிப்பு நிறுவனம் களம் இறக்கியது. அவர்களுடன் இன்னும் சில புது கோமாளிகளும் நிகழ்ச்சிக்குள் உள்ளே வந்தனர். பொதுவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடிகள் கூட பாசிட்டிவாகவே அமைந்திருந்தது.

ஆனால் இந்த சீசன் தொடங்கியதில் இருந்து, போட்டி, பொறாமை என நிகழ்ச்சி சில ரசிகர்களை மட்டுமே கவர்ந்தது. பல சீசன்களை தாண்டிய குக் வித் கோமாளி ரசிகர்கள் இந்த சீசனை வெறுக்க தொடங்கினர். அந்த நிலையில் மேலும் சில நெகட்டிவ் விமர்சனங்களை தற்போது பெற்று இருக்கிறது.

சமீபத்திய எபிசோட்களில், கோமாளி ராமர் மற்றும் அன்ஷிதா இரட்டை அர்த்த வசனங்களில் பேசியதும் ரசிகர்களை முகம் சுழிக்கும்படி வைத்து இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இதுவரை இந்த சீசனில் இரண்டு எலிமினேஷன் மட்டுமே நடந்திருக்கும் நிலையில் அதற்கும் உண்மை காரணத்தை நிகழ்ச்சியில் குரோஷி கூறியிருப்பதும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மூட்டு வலியால் மட்டுமே வெளியேறியதாகவும், இன்னொரு போட்டியாளரான சீரியல் நடிகர் வசந்த் வசீ தன்னுடைய சீரியல் கமிட்மெண்ட் உங்களால் மட்டுமே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவித்து இருந்தார். அப்பொழுது நடுவர்கள் சரியாக கணிக்காமல் தேவைப்படுவோரை வைத்துக்கொண்டு தேவையில்லாதவர்களை வெளியேற்றுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top