Categories: latest news

மதுரை முத்து வச்சு ஃபோர் அடிச்சிட்டு போல… மீண்டும் குக் வித் கோமாளியின் சூப்பர் ஐடியா!

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி தங்களுடைய பாப்புலாரிட்டியை தக்க வைத்துக் கொள்ள தொடர்ச்சியாக புதிய விஷயங்களை செய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய ஐடியாவை கையில் எடுத்திருக்கின்றனர்.

சமையல் நிகழ்ச்சிகளில் வித்தியாசம் காட்டியது குக் வித் கோமாளி. ஒருவர் சமைக்க இன்னொருவர் தொல்லை கொடுக்க என ரசிகர்களுக்கு ஸ்டிரெஸ் பஸ்டர் ஷோவாக அமைந்தது வித் கோமாளி. நான்கு சீசன்களை கடந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய தூணாக இருந்த தயாரிப்பு நிறுவனம் வெளியேறியது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை பாக்ஸ் ஆபிஸ் என்ற புதிய நிறுவனம் தொகுத்து வழங்க இருந்த நிலையில் முக்கிய நடுவராக இருந்த வெங்கடேஷ் பட்டும் அவர்களுடன் வெளியேறினார். இதனால் ரசிகர்கள் பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தும் புதிதாக வந்த தயாரிப்புக் குழு ஒவ்வொரு வாரமும் புதுமையை புகுத்தி ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறது.

ஏற்கனவே இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட மதுரை முத்து சமையல் சொதப்பி ஒரு சில வாரங்களில் வெளியேற அவரின் காமெடிக்காக அவ்வப்போது மீண்டும் எபிசோடுகளில் வரவைத்து ரசிக்க வைத்தனர். அந்த வகையில் தற்போது கடந்த வாரம் எலிமினேட்டான ஷாலினி சோயா மீண்டும் குக் வித் கோமாளிக்கு வந்திருக்கிறார்.

பொதுவாக ஏற்கனவே எலிமினேட்டான போட்டியாளர்கள் வைல்ட்கார்டு மட்டுமே வருவார்கள். அந்த வகையில் சோயா மீண்டும் அன்றைய நாளில் தான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் வெகுளி பேச்சுக்கு ரசிகர்களிடம் இருக்கும் புகழை தக்க வைத்துக் கொள்ள நினைத்த தயாரிப்பு குழு மீண்டும் அவரை நிகழ்ச்சிக்குள் இறக்கி இருக்கிறது.

தற்போது கண்காணிப்பாளராக என சொல்லிக்கொண்டு சோயாவை உள்ளே அனுப்பி இருக்கும் நிர்வாக குழு இவர் காமெடிகளால் இன்னும் ரசிகர்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சில வாரங்கள் ஷாலின் சோயாவிற்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் இருந்தது. பின்னர் அவரின் உடனே இதுதான் என தெரிந்து கொண்டபின் ரசிகர்கள் அவரை ரசிக்க தொடங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

2 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

4 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

4 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

6 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

9 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

22 hours ago