இவர போடுங்க சரியா வரும்!.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த கமலே ரெக்கமண்ட் செய்த நடிகர் இவர்தான்!..

ஒரு வீட்டில் 10 போட்டியாளர்கள் இருப்பார்கள். வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார். அல்லது மக்களின் ஓட்டுப்படி காப்பாற்றப்படுவார். விதவிதமான துறைகளில் இருந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். போட்டியாளர்களுக்கு விதவிதமான டாஸ்குகள் கொடுக்கப்படும். ஒருவர் வீட்டின் கேப்டனாக இருப்பார்.

சமைப்பது, பாத்திரம் கழுவுவது, சுத்தம் செய்வது என வேலையை பிரித்து கொள்வார்கள். போட்டியாளர்களுக்கு இடையே காதல் வந்தால் டி.ஆர்.பி. எகிறும். இப்படிப்பட்ட நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இது முதலில் வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் துவங்கப்பட்டது. அதன்பின் இந்தியா வந்தது. அதுவும் ஹிந்தி மொழியில்தான் முதலில் உருவாக்கப்பட்டது.

அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறிவிட்டது. நிகழ்ச்சியை நடத்துபவர் நடிகராக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதால் பெரிய நடிகர்களுக்கு பல கோடிகள் சம்பளமாக கொடுத்து இந்நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். தமிழை பொறுத்தவரை முதல் சீசனில் இருந்து 7வது சீசன் வரை கமலே நடத்தினார்.

ஒரு சீசனுக்கு அவருக்கு பல கோடிகள் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அதிலும் கடைசி சில சீசனுக்கு 100 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டது. அதனால்தான், சினிமாவில் நடிக்காமல் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தார் கமல். விரைவில் 8வது சீசன் துவங்கவுள்ள நிலையில் நான் இதில் பங்கேற்கவில்லை என் கமல் சொல்லிவிட்டார்.

நிறைய படங்களில் நடிப்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கமலே சொல்லிவிட்டார். எனவே, பிக்பஸ் தமிழ் நிகழ்ச்சியை இனிமேல் யார் நடத்துவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சூர்யா, சிம்பு என சிலரின் பெயர் அடிபட்டது. அதன்பின் சூர்யா மறுத்துவிட்டார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில், சிம்பு அல்லது சிவகார்த்திகேயன் என இருவரில் ஒருவரை பரிசீலிக்கலாம் என கமலும், கமலுக்கு நெருக்கமான விஜய் டிவி மகேந்திரனும் பரிந்துரை செய்துள்ளார்களாம். அதிலும், ராஜ்கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதால் அப்படம் வெளியாகும் போது அவர் நிகழ்ச்சியை நடத்தினால் அதுவே படத்திற்கு புரமோஷனாக அமையும் என்பதால் சிவகார்த்திகேயனை கொஞ்சம் கூடுதலாகவே ரெக்கமண்ட் செய்கிறதாம் கமல் தரப்பு.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே விஜய் டிவியில் வேலை செய்தவர்தான். எனவே, அவர் சம்மதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதோடு, வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வேலை. 100 கோடி சம்பளம் எனில் யார் வேண்டாம் என சொல்வார்?.. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடத்தப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Related Articles
Next Story
Share it