Categories: television

Sun tv: டிஆர்பி-யில் சொதப்பிய 3 சீரியல்களை பேக்கப் பண்ணி… புது சீரியல்களை களமிறக்கும் சன் டிவி!..

சீரியலுக்கு என்று பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் சன் டிவியின் சீரியல்கள் தான் டாப் லிஸ்டில் இருக்கும். அந்த அளவிற்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி முதல் ஐந்து இடங்களை எப்போதுமே தனக்கென்று தக்க வைத்துக் கொள்ளும்.

தற்போதயெல்லாம் சீரியல்களுக்கு திரைப்படங்களுக்கு நிகரான வரவேற்பு கிடைத்து வருகின்றது. அதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது சீரியல்களை விரும்பி பார்த்து வருகிறார்கள். காதல், எமோஷன், காமெடி என்று ஒவ்வொரு சீரியலும் விறுவிறுப்பாக இருக்கின்றது. சன் டிவியை பொறுத்தவரையில் ஒரு சீரியல் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஓடிய பிறகுதான் முடிவுக்கு வரும்.

அந்த வகையில் இரண்டு வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இனியா சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இனியா சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் இனியா சீரியலில் நடித்து வந்த ஆலியா மானசா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த சீரியல் குறித்தும் இந்த சீரியல் முடிவு பெற்றது குறித்து மிக உருக்கமாக பதிவிட்டு இருக்கின்றார்.

இந்த வாரத்துடன் இந்த சீரியல் முடிவுக்கு வரவுள்ளது. இனியாவுக்கு குழந்தை பிறந்த பிறகு இது தொடர் முடிவடைய உள்ளது. இதே போல் சுந்தரி சீரியலும் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது. அதற்கு அடுத்ததாக டிஆர்பி ரேட்டிங்கில் பல வருடங்களாக முதலிடத்தை பிடித்து வந்த கயல் சீரியலும் கடைசி கட்டத்தை நெருங்கி விட்டது.

இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த 3 சீரியல்கள் சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல். இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில் இதற்கு பதிலாக 4 புதிய சீரியல்களை சன் டிவி களமிறக்க உள்ளது.

அந்த வகையில் ரஞ்சனி என்ற சீரியல் ஆரம்பமாக உள்ளது. இந்த சீரியலில் ஜிவி டெம்பில் கதாநாயகியாக நடிக்கின்றார். இந்த சீரியல் இனியா தொடர் ஒளிபரப்பாகி வந்த நேரத்தில் ஒளிபரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. அடுத்ததாக ஆடுகளம், ராகவி, உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட சீரியல்கள் விரைவில் சன் டிவியில் அறிமுகமாக உள்ளன.

இந்த சீரியல்கள் அடுத்தடுத்து சன் டிவியில் சீரியல்கள் முடிவடையும் நேரத்தில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் இந்த புது சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தங்களுக்கு பிடித்த சீரியல் முடிந்தாலும் புது சீரியல்கள் ஒளிபரப்பாக இருப்பதால் இல்லத்தரசிகள் புது சீரியல்களை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

7 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

8 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

10 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

16 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

17 hours ago