பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாவது சீசனில் அரசி கேரக்டரில் நடித்துவரும் சத்யா சாய் தான் சீரியலில் இருந்து விலகி காரணம் குறித்து தற்போது தெரிவித்திருக்கிறார்.
அண்ணன் தம்பி கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் நான்கு ஹீரோக்கள் இருந்தனர். மூர்த்தியாக நடித்த ஸ்டாலினுக்கு சுஜிதா ஜோடியாக நடித்தார். அவரை தொடர்ந்து வெங்கட்டுக்கு ஜோடியாக ஹேமா நடித்திருந்தார். அடுத்த தம்பி குமரனுக்கு முதலில் ஜோடியாக நடித்தவர் சித்ரா.
ஆனால் அவர் திடீரென இறந்துவிட அந்த இடத்துக்கு காவ்யா அறிவுமணி, பின்னர் லாவண்யா ஜோடியானார். அதுப்போல அவர்களின் கடைசி தம்பியாக வந்த சரவணன் விக்ரம் ஜோடியாக பல நாயகிகள் உள்ளே வந்தனர். ஆனால் சிலரால் ஒரு சில எபிசோட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.
அந்த லிஸ்ட்டில் இருந்தவர் தான் சத்யா சாய். தற்போது சீசன் 2ல் பாண்டியன் கடைசி மகள் அரசியாக நடித்து வருகிறார். அவரிடம் முதலில் சீசனிலிருந்து விலகிய காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து பேசிய அவர், கடைசி தம்பி கண்ணன் கேரக்டருக்கு என்னை தான் ஜோடியாக முதலில் அணுகினார்கள்.
முக்கிய கேரக்டர் என்றும், சீரியல் முழுவதிலும் வருவீர்கள் எனவும் குறிப்பிட்டு இருந்தனர். முஸ்லீம் கேரக்டரில் என்னை வைத்து போட்டோ சூட்களும் நடத்தப்பட்டது. மூன்று நாட்களுக்கு சூட்டிங் நடந்திருக்கும். ஆனால் சீரியல் நிர்வாகம் தரப்பில் முஸ்லீம் கேரக்டரில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
இந்த கேரக்டரை இனி தொடர வேண்டாம் என முடிவெடுத்துவிட்டனர். அதனால்தான் நான் சீரியலில் இருந்து மூன்றே நாளில் வெளியேற வேண்டிய நிலை உருவானது. இதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கும் போது என்னை அணுகி அரசி கேரக்டர் குறித்து பேசினார்கள். எனக்கும் அந்த கேரக்டர் பிடித்திருந்ததால் உடனே ஓகே சொல்லி தற்போது அதில் நடித்த வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…