Categories: television television news

தீபாவளி தினத்தில் நடந்த சோகம்… கார் விபத்தில் உயிரிழந்த சின்னத்திரை பிரபல நடிகர் மகன்..

Actor: பிரபல சின்னத்திரை நடிகரின் மகன் தீபாவளி தினத்தில் நடந்த திடீர் கார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பலியான சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியாகி இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த சீரியல் நடிகர் கார்த்திக் மகன் நிதிஷ் என்பவர். சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்தும் வருகிறார். நேற்று தீபாவளியை முன்னிட்டு நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று இருக்கிறார்.

ஓஎம்ஆர் சாலையில் இருக்கும் விளையாட்டு கிரவுண்ட்டுக்கு சென்று விட்டு திரும்பும்போது வேளச்சேரியை சேர்ந்த விஜயநகர் பகுதியில் அருகே வந்து கொண்டு இருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்கு உள்ளானது.

இதில் டிரைவர் சீட்டினின் பக்கம் அப்பளமாக நொறுங்கியது. இதனால் நித்திஷ் மிக மோசமாக விபத்துக்கு உள்ளாகினார். அது மட்டுமல்லாமல் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு பரிசோதிக்கும் போது நித்திஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

மற்றவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Published by
ராம் சுதன்