Categories: television television news

சிங்கப்பெண்ணே சீரியலின் நடிகர்களுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா?.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..

Singapenne: சன் டிவியில் டிஆர்பியில் முதல் சில இடங்களில் இருக்கும் சிங்க பெண்ணே தொடரில் நடித்து வரும் வாங்கும் சம்பளம் குறித்த முக்கிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் எல்லா பிரபல தொலைக்காட்சிகளிலும் சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இருந்தும் பல ஆண்டுகளாக டிஆர்பியில் முதல் பல இடங்களில் தக்க வைத்துக் கொண்டிருப்பது என்னவோ சன் டிவி மட்டும் தான்.

இதில் போட்டியில் சமீபத்திய வருடங்களாக தான் விஜய் டிவி உள்ளே வந்திருக்கிறது. இரண்டு அல்லது மூன்று சீரியல்கள் மட்டுமே டிஆர்பிக்குள் வருவதும் முதலிடத்தினை தக்க வைக்க முடியாமல் தள்ளாடி கொண்டே இருக்கிறது.

ஆனால் சன் டிவியின் முக்கிய சீரியல்கள் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டால் அதை யாரிடமும் பறி கொடுக்காமல் தொடர்ச்சியாக அதே இடத்தில் நிலை கொண்டு விடுகிறது. அப்படி ஒரு சீரியலாக தான் சன்டிவியில்

சிங்கப்பெண்ணே ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் பல நாட்களாக டாப் ஐந்துக்குள் இருக்கும் நிலையில் அந்த தொடரில் நடித்து வரும் பிரபலங்கள் வாங்கும் ஒருநாள் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.ஆனந்தியாக நடிக்கும் மனிஷா மகேஷ் ஒரு நாளைக்கு ரூ. 12,000 சம்பளமாக பெறுகிறார்.

அதே போல், ஜெயந்தி வேடத்தில் நடிக்கும் தாரணி 5 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். விஜே பவித்ரா 8 ஆயிரமும், தர்ஷன் கவுடா 15 ஆயிரமும், அமல்ஜித்திற்கு 15,000 சம்பளமும், நடிகை அஞ்சுவிற்கு ரூ. 8,000 சம்பளமும் கொடுக்கப்பட்டு வருகிறது.

Published by
ராம் சுதன்