அதுக்குள்ள ஒரு வருஷம் ஆச்சா? கணவர் இறப்பு நாளில் ஸ்ருதி சண்முகபிரியாவின் வைரல் பதிவு…

Published on: August 8, 2024
---Advertisement---

நாதஸ்வரம் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. அந்த தொடரின் வெற்றிக்கு பின்னர் சின்னத்திரையில் வலம் வந்தவர் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிகளாக இவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் வைரலானது.

திருமணம் முடிந்த ஒரே வருடத்தில் அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்தார். இது சின்னத்திரை ரசிகர்களை பெரிய அளவில் பாதித்தது. இருந்தும் தன்னுடைய கணவர் அரவிந்த் தன்னுடனே இருக்கிறார் என அவர் இறந்த நாளிலேயே வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதை அவர் சொல்லில் மட்டும் காட்டாமல் தன்னுடைய ஒவ்வொரு பதிவிலும் கணவரை இன்னுமும் உயிருடன் வைத்துக் கொண்டிருக்கிறார்.

கணவர் இறந்த நாளிலிருந்து தற்போது வரை ஸ்ருதி அவருடைய பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டு வருகிறார். அதை பார்க்கும்போது அரவிந்த் இன்னும் உயிருடன் இருப்பது போலவே இருப்பதாகவே ரசிகர்கள் பலர் கமண்ட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ஸ்ருதி தான் பயணம் செய்யும் இடங்களில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து அதை ஸ்டேட்டஸாக போடும்போது சிலருக்கு மனம் கனத்துப் போவதும் வழக்கமாகி இருக்கிறது. அந்த வகையில் அரவிந்த் இறந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அதற்கு சுத்தி போட்டிருக்கும் பதிவு தற்போது வைரலாக பரவி இருக்கிறது.

அந்த பதிவில், இந்த வருடம் எனக்கு கடுமையாக தான் இருந்தது. இருந்தும் உங்களை நான் எந்த நேரத்திலும் மிஸ் பண்ணவே இல்லை. எப்பொழுதும் உங்களை நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்களும் என்னுடனே இருந்தீர்கள். எனக்காக பாசிட்டிவ் கொடுத்து என்னை வழி நடத்தினீர்கள்.

உங்கள் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு உங்களை என் மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன். இந்த வருடம் எனக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்தது. வாழ்க்கையின் புதிய பரிணாமத்தை அறிந்து கொண்டேன். நாம் ஏற்கனவே சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மை மரணம் கூட பிரிக்காது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment