ஹிட்டடித்த விஜய் டிவி நாயகியை கொக்கி போட்டு தூக்கிய சன் டிவி.. கார்த்தி ஹீரோயினாமே!

by ராம் சுதன் |

தற்போது விஜய் டிவியில் ஹிட் அடித்த நாயகிகள் சன் டிவி பக்கம் வருவது வழக்கமாகி இருக்கும் நிலையில் இன்னொரு பிரபல நாயகி தற்போது சன் டிவி பக்கம் தலை வைத்து இருக்கிறார்.

பெரும்பாலான ரசிகர்கள் சன் டிவியில் சீரியல் பார்ப்பதை தான் இன்னமும் விரும்பிக்கொண்டு இருக்கின்றனர். அதுபோல நடிகர் நடிகைகளும் சன் டிவியில் கிடைக்கும் சீரியல் வாய்ப்பை விடாமல் பிடித்துக் கொள்வதும் வழக்கமாகி இருக்கிறது. காரணம் சன் டிவி போன்ற தொலைக்காட்சியில் ஒரு தொடர் ஒளிபரப்பினால் பல வருடங்கள் செல்லும்.

இது அவர்களுக்கு சரியான சம்பளத்தினையும், புகழையும் பெற்றுத் தரும் என்பது அவர்கள் கணிப்பாக இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்தில் முடிந்த ஈரமான ரோஜாவே இரண்டாம் சீசனில் நடித்த சுவாதி தற்போது சன் டிவி பக்கம் திரும்பி இருக்கிறார்.

ஈரமான ரோஜாவே சீரியலில் சுவாதிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என ரசிகர்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அந்த சீரியல் பாதியிலேயே முடிக்கப்பட்டது. அதில் முதல் நாயகியாக நடித்த கேப்ரியல்லா தற்போது சன் டிவியில் மருமகள் சீரியலில் நடித்து வருகிறார். தற்போது இதே ரூட்டை பிடித்த சுவாதி, மூன்று முடிச்சு என்ற சீரியல் மூலம் சன் டிவிக்கு வந்திருக்கிறார்.

இதன் முதற்கட்ட புரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் ஒளிபரப்பாக இருக்கும் நேரம் மற்றும் நாயகன் குறித்த எந்த தகவல்களும் ப்ரோமோவில் இடம் பெறவில்லை. இந்த சீரியலின் ஒளிபரப்பால் சுந்தரி அல்லது வானத்தைப்போல சீரியல் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆலியா மானசா, சைத்ரா ரெட்டி, ஷபானா உள்ளிட்ட பிற தொலைக்காட்சி பிரபல நடிகைகள் சன் டிவி பக்கம் வந்துள்ள நிலையில் அடுத்த இணைப்பாக சுவாதி இணைந்திருக்கிறார். மேலும் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் மெய்யழகன் திரைப்படத்திலும் சுவாதி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாதி மூன்று முடிச்சு சீரியல் ப்ரோமோ: https://www.youtube.com/watch?v=jtjyPO-XtVA&t=12s

Next Story