Connect with us

சிங்கப்பெண்ணே டூ கயல் வரை… சன் டிவி ஹிட் 5 சீரியலில் இந்த வாரம் என்ன நடக்க போகுது பாருங்க!..

television

சிங்கப்பெண்ணே டூ கயல் வரை… சன் டிவி ஹிட் 5 சீரியலில் இந்த வாரம் என்ன நடக்க போகுது பாருங்க!..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஐந்து சீரியல்களின் புரோமோக்கள்

SunTV: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பிஎல் டாப் ஹிட் 5 வில் இருக்கும் முக்கிய சீரியல்களில் இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என குறித்த புரோமோ வெளியிடப்பட்டிருக்கிறது.

சிங்க பெண்ணே தொடரில் அன்பு வீட்டிற்கு தீபாவளி பண்டிகைக்காக வருகிறார் ஆனந்தி. அங்கு அன்புவின் அம்மா மற்றும் தங்கை இருவரும் அவரிடம் பாசமாக இருப்பதை பார்த்து தன்னுடைய குடும்பத்தை நினைத்து ஏங்குகிறார். இதனால் தனக்கும் அன்புக்கும் இருக்கும் உறவு குறித்து சிந்திக்கிறார். அந்த நேரத்தில் வெடி வெடித்து அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் கட்டிக் கொண்டு நிற்க அதை மகேஷ் பார்த்து விடுகிறார்.

சுந்தரி தொடரில் கார்த்தி கண் தெரியாதவர் போல் நடித்திருப்பது அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. அந்த நேரத்தில் ஏற்படும் சண்டையில் அவருக்கு தலையில் அடிபட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் வெற்றி. அப்பொழுது வெற்றிடம் என்னைப் பற்றி நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது என கார்த்தி சத்தியம் ஆகிவிடுகிறார். சுந்தரி கார்த்தி நடித்த விஷயம் தெரிய அவர் தமிழை தன்னிடம் இருந்து பிரிக்க தான் இதை செய்கிறாரோ என சந்தேகம் கொள்கிறார்.

மூன்று முடிச்சு தொடரில் என்னுடைய குடும்பம் என்னால் நிறைய அசிங்கப்பட்டதாக நந்தினி வருத்தம் கொள்கிறார். அவர்கள் இலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்க அவை தட்டி விடும் சுந்தரவல்லி விருந்து சாப்பாடு கேக்குதோ எனக் கத்துகிறார். இதை அறிந்து கொண்டு சூர்யா சுந்தரவல்லியிடம் சத்தம் போடுகிறார். இருந்தும் நந்தினி இந்த குடும்பத்தில் எப்படி வாழ போகிறேன் என பயம் கொள்கிறார்.

கயல் தொடரில் எழிலின் அம்மா மூர்த்தி வைத்து போட்ட பிளானை கயல் தகர்த்து விடுகிறார். என்னிடமிருந்து என் குடும்பத்தை பிரிக்க என்னுடைய அத்தை என்ன திட்டம் போட்டாலும் அது நடக்காது. என்னிடமிருந்து எழிலையோ, குடும்பத்தையோ யாராலும் பிரிக்க முடியாது என்கிறார் கயல்.

மருமகள் தொடரில் ஆதிரை மற்றும் பிரபு திருமணத்தில் பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. பிரபு தன்னுடைய அப்பாவிடம் நடந்து கொள்வது ஆதிரைக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில் ரோகிணி காணாமல் போக அதனால் மண்டபத்தில் ஒரு பிரச்சனை விடுகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த டாப் 5 சீரியல்கள் தான் டிஆர்பி யின் தற்போது முதல் இடத்தை பிடித்து வருகிறது. இந்த புரோமோக்கள் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் எபிசோடுகளில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top