television
தேவையே இல்லாம உருட்டுனப்பவே தெரியும்… சிக்கலில் விஜய்டிவி… ஆக்ஷன் காட்டும் சன்டிவி!
டிஆர்பி ரேட்டிங்கின் இந்த வார நிலவரம்
VijayTV: விஜய் டிவி சமீப காலமாகவே தன்னுடைய சுயத்தை இழந்திருக்கிறது. இதில் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய பிரச்சினை தற்போது உருவெடுத்து இருக்கிறது. இது குறித்த சுவாரசிய அப்டேட்கள் வெளியாகி இருக்கிறது.
சின்னத்திரையில் சீரியல்கள் என்றால் சன் டிவி தான் என்ற நிலையை சமீப வருடங்களாகவே விஜய் டிவி உடைத்து வருகிறது. வித்தியாசமான தொடர்கள் மூலம் ரசிகர்களை தங்கள் வசம் விஜய் டிவி ஏற்கனவே இழுத்துவிட்டது. இதனால்தான் சிறகடிக்க ஆசை தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இன்றளவும் உள்ளனர்.
ஆனால் சன் டிவியின் டெக்னிக்கை தாங்களும் பயன்படுத்துகிறோம் என நினைத்து மீண்டும் சரிவை நோக்கி விஜய் டிவி சென்று கொண்டிருக்கிறது. பொதுவாக சன் டிவியின் சீரியல்கள் 5,6 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பப்படும். இதனால் அவர்கள் தொடங்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு கிளைமாக்ஸில் இன்னொரு கதையுடன் நாடகத்தை முடிக்கும் வழக்கம் கொண்டவர்கள்.
இது சன் டிவி ரசிகர்களுக்கு சாதாரண விஷயமாக மாறிவிட்டது. ஆனால் பொதுவாகவே விஜய் டிவியில் நிறைய சீரியல்கள் பல வருடங்கள் செல்லாது. தொடங்கப்பட்ட கதையில் அதனுடைய சுவாரசியங்களை சொல்லிவிட்டு சீரியலை முடிப்பது தான் வணக்கம். இதனால்தான் விஜய் டிவிக்கு ரசிகர்களும் அதிகரித்தனர். ஆனால் தற்போது இவர்களும் சன் டிவி பார்முலாவை பாலோ செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
தேவையே இல்லாமல் சீரியல்களை இழுத்துக் கொண்டு செல்ல அது அவர்களுடைய டிஆர்பியில் பெரிய இடியை இறக்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட கதையை விட்டு விட்டு ரூட்டை மாற்றி தேவையே இல்லாமல் எபிசோடை வளர்ப்பதால் சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தில் இருந்து சறுக்கி தற்போது 7.88 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
முதல் ஐந்து இடத்துக்குள் இருந்த பாக்கியலட்சுமி தொடர் தற்போது 6.52 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 7வது இடத்தில் உள்ளது. வழக்கம் போல சன் டிவியின் கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு சீரியல் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளது. விஜய் டிவி இதை சரி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.