Categories: latest news

ஒன்னுல மூணு… ராதிகாவிடம் மல்லுக்கட்டும் கோபி… அசிங்கப்படும் ரோகிணி… மீனாவுக்கு சப்போர்ட் செய்த செந்தில்

விஜய் டிவியின் பிரபல தொடர்களின் இன்றைய எபிசோட் குறித்த முக்கிய தகவல்கள்.

டிஆர்பியின் முதல் இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் வீட்டிற்கு வரும் மீனா மற்றும் முத்து இருவரும் கிறிஷை தத்தெடுத்துக் கொள்ளலாம் என குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கு விஜயா திட்டிக் கொண்டிருக்கிறார். மேலும் கிறிஸின் கதையையும் சொல்லுகின்றனர்.

இதைக் கேட்கும் மனோஜ் அப்போ அந்த பொண்ணு சரியான கேடியா தான் இருப்பா போல இருக்கு. சொல்லாம எந்த மடையனையாவது கல்யாணம் கூட பண்ணி இருப்பா என்கிறார். இதை அப்போது அங்கு வரும் ரோகிணி கேட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் ரூமுக்கு செல்லும் ரோகினி தன்னுடைய தாயிற்கு ஃபோன் செய்து வீட்டில் நடந்த விஷயங்களை கூறுகிறார். அவர் இது நல்ல விஷயம் தானே கிறிஸ் உன்னுடன்இருப்பான் என்கிறார்.

ஆனால் ரோகிணி கோபமாகி இனி அவங்க போன் பண்ணா நீ எடுக்கக் கூடாது என திட்டி விட்டு போனை வைக்கிறார். பின்னர் வித்யாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வு நான் குழந்தை பெற்றுக் கொள்வதுதான். அப்போதான் மனோஜ் என்னை விஷயம் தெரிந்தாலும் உடனே மன்னித்து விடுவான் என்கிறார். சீதா படிப்பில் பாஸாகிவிட்டதை மீனாவிற்கு கால் செய்து கூறி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மற்றும் கோபி பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு இடையே பெரிய சண்டை விடுகிறது. இன்னும் என்னுடன் ஏன் இருக்கீங்க டைவர்ஸ் செஞ்சிட்டு போய் உங்க குடும்பத்துடன் இருக்க வேண்டியதுதானே என்கிறார். இதில் கோபமாகும் கோபி அவரை திட்டி விட்டு வெளியில் வருகிறார்.

அவர் குடும்பத்தினர் எல்லோரும் வெளியிலே உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருக்கும் போது அதை பார்த்து ஏங்குகிறார் கோபி. பின்னர் பாக்யா சிரிப்பதை பார்த்து எல்லாம் உன்னால தான் உன் சிரிப்பு எத்தனை நாள் என்று பார்க்கிறேன் என்கிறார். பின்னர் ரெஸ்டாரண்டுக்கு வந்து அங்குள்ள ஊழியர்களை திட்டிக் கொண்டிருக்கிறார்.

கோபி நண்பர் செந்தில் வந்து இப்போதைக்கு இதெல்லாம் தேவையில்லை. உன் தொழிலை சரியாக பார் என அறிவுரை கூறுகிறார். பழனிசாமி மற்றும் பாக்கியா இருவரும் வீட்டில் இனியா செய்ததை பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் சீசனில் செந்தில், தன்னுடைய சகோதரர்களிடம் பாண்டியன் மீனாவிடம் நடந்து கொள்வதை குறித்து பேசி சங்கடப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது வரும் தந்தையிடம் எதற்கு மீனாவிடம் கோபமாக பேசுனீர்கள் என கேட்க அவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக கதிருடன் சேர்ந்து நீயும் கெட்டுப் போயிடாதே என்னை திட்டி விட்டு செல்கிறார்.

பின்னர் மீனா வேலைக்கு சென்று கொண்டிருக்க அவரை அழைத்துக் கொண்டு போய் விடுவதாக செந்தில் கூட்டி செல்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது நாம் வீட்டில் அட்ஜஸ்ட் செய்துதான் போக வேண்டும் என அவர் வருத்தப்பட்டு சொல்கிறார். இதில் கவலையாகவும் செந்தில் இந்த பிரச்சினையை உடனே தீர்த்திடனும் என்ற ரீதியில் பேசிவிட்டு மீனாவின் தந்தை வீட்டிற்கு சென்ற உங்களைவிட பெரிய அரசு உத்தியோகத்தில் நான் வந்து காட்டுவேன் என சவால் விடுகிறார். அதை கதிர் வீடியோவாக எடுப்பதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

36 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago