அரெஸ்ட்டான முத்து… பாக்கியா எடுத்த முடிவு… வீட்டில் சிக்கிய கதிர்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:33  )

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜின் நண்பர் அவருடைய வெளிநாட்டு நண்பருக்கு நிறைய கம்பெனிகள் இருப்பதாகவும் அவரிடம் இணைந்தால் பெரிய லாபம் கிடைக்கும் என கூறுகிறார். இதனால் மனோஜ் சந்தோஷம் அடைகிறார்.

வீட்டிற்கு வரும் போது மீனாவிடம் நாளை சத்யாவிற்காக குடித்த மாதிரி நடிக்கப் போவதாக சொல்லிவிடுகிறார். அதைப் போலவே முத்து குடித்தது போல நடித்துக் கொண்டிருக்க அங்கு வரும் சத்யா இது தெரியாமல் அவரிடம் சண்டை போடுகிறார். அப்பொழுது கல்லூரி முதல்வர் அங்கே நடந்து வர அவர் இதை பார்த்து போலீசிற்கு கால் செய்து விடுகிறார்.

சத்யாவிடம் நாளை நீ கல்லூரிக்கு வா. எக்ஸாம் எழுதலாம் என கூறி விட முத்து சந்தோஷம் அடைகிறார். ஆனால் அந்த நேரத்தில் போலீஸ் அங்கு வந்து விட முத்துவை அரெஸ்ட் செய்து அழைத்து செல்கின்றனர். மீனா காவல் நிலையம் சென்று எவ்வளவு சொல்லியும் அவர்கள் விட மறுத்து விட ஸ்ருதிக்கு கால் செய்து கூறுகிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் இனியா டான்ஸ் போட்டியில் தேர்வாகி விடுகிறார். இதனால் குடும்பத்தினர் சந்தோஷமாக இருக்கின்றனர். ரெஸ்டாரண்டிற்கு வரும் பாக்கியா 750 ஆர்டர் வந்திருப்பது பார்த்து ஆச்சரியம் அடைகிறார். அங்கிருந்து செஃப் இன்னும் ஆர்டர் எடுக்கலாம் எனக் கூற பாக்கியா அதற்கு மறுத்து விடுகிறார்.

பழனிச்சாமி அவரை பார்க்க வர இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். எல்லோரும் ஈஸ்வரியை கஷ்டப்படுத்துவதாக அவர் கூற பழனிசாமி மத்தவங்கள விட நீங்கதான் ஈஸ்வர்யா அம்மா கிட்ட நிறைய திட்டு வாங்கி இருக்கீங்க. உங்களுக்கு அவங்களை ஏதும் சொல்லணும்னு தோணலையா என்கிறார்.

மத்தவங்க நம்மள பத்தி பேசும் போது நமக்கு கோவமா தான் இருக்கும். ஆனா அந்த கஷ்டத்தை உங்களுக்கு கொடுக்க கூடாதுன்னு நினைப்பேன் என்கிறார். பின்னர் செஃப் பொருட்களை எனக்கு தெரிந்த இடத்தில் வாங்கிக் கொள்ளலாம் என அவர் கேட்க பாக்கியா அதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறார்.

செழியன் கோபியை பார்க்க அவருடைய ரெஸ்டாரன்டிற்கு வந்து இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த நாள் பிரியாணி ஆர்டருக்கு அடுப்பை பற்றவைக்க ஈஸ்வரியை அழைக்கிறார் பாக்கியா. ஆனால் ஈஸ்வரி மறுக்க என்னை பெண்ணாக நினைத்தால் வரவேண்டும் என கூறிவிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் பாண்டியன் கடையிலிருந்து 11 ஆயிரம் பணத்தை திரும்ப வைக்க கதிர் தன்னுடைய நண்பர்களிடம் கடன் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பாண்டியனுக்கு கதிர் தான் என தெரிந்து விட்டதால் கோபமாக வீட்டிற்கு வருகிறார்.

வீட்டில் இருப்பவர்களை வைத்துக்கொண்டு அந்தப் பணத்தை எடுத்தது கதிர் தான் என்ற உண்மையை உடைத்து விடுகிறார். இதில் ராஜி அதிர்ச்சியாக கதிரை பார்த்துக் கொண்டிருக்க, பாண்டியன் அவரை திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.

Next Story