Categories: television

சத்யாவை காப்பாற்றிய முத்து… கோபி செய்த சதிவேலை… பாண்டியனை கலாய்த்த மீனா!..

VijayTV: இன்றைய சிறகடிக்க ஆசை தொடரில் மீனா வீட்டுக்கு முத்து வந்து ஆறுதல் சொல்கிறார். அந்த நேரத்தில் போலீஸ் வந்து சத்யா குறித்து கேட்க முத்து யாரோ வேண்டும் என்றே செய்ததாக கூறுகிறார். இது குடும்ப பிரச்னை இல்லை. நீங்கவந்து எழுதி கொடுக்கணும். அந்த அம்மாவும் வந்து எழுதி தர வேண்டும் என்கிறார்.

யார் சொல்லியும் கேட்காமல் சத்யா மாடியில் இருந்து குதிக்க நிற்க முத்து பத்தாவது மாடியில் இல்லை. இரண்டாம் மாடியில் நிற்கிற எலும்புதான் உடையும் என்கிறார். பின்னர் முத்து அவர் அறியாமல் இறக்கிவிடுகிறார். செல்வம் வீட்டுக்கு சத்யாவை அழைத்து செல்கிறார். புது போனை மீனா கொடுக்கிறார்.

என்னுடைய கையில் இருந்தவரை எதுவும் நடக்கலை. அப்போ யாரோ பிளான் செய்துதான் ரிலீஸ் செய்து இருப்பார்கள் எனப் பேசுகிறார். மீனாவை அழைத்து கொண்டு வீட்டுக்கு வருகிறார் முத்து.

பாக்கியலட்சுமி தொடரில் எழில் தன்னுடைய பட பூஜை விழாவுக்கு வந்து வீட்டினரை அழைக்கிறார். ஆனால் பாட்டி நான் வரமாட்டேன் என்கிறார். என்ன ஆச்சு எனக் கேட்க அவர் அதிர்ஷ்டமில்லாமல் எனக்கு முன்னரே காலை வர மாட்டிகிறார் என்கிறார். இதை தொடர்ந்து பாக்கியாவிடம் எழில் பேசுகிறார்.

தயாரிப்பாளரிடம் வந்து பேசும் கோபி பூஜை எப்படி நடப்பதாக வந்து கேட்கிறார். விருந்தினர் லிஸ்ட்டை கொடுத்து சரியா இருக்கா பார்க்க சொல்கிறார். கோபி லிஸ்டில் ஈஸ்வரி பெயர் இல்லை எனக் கேட்க அவர் வரவில்லை என்கிறார் தயாரிப்பாளர்.

எழிலிடம் கூறி அவன் பாட்டியை அழைத்து வர சொல்லுங்கள் என்கிறார். இன்னொரு விஷயமாக பாக்கியாவை கலந்துக்க கூடாது எனச் சொல்ல சொல்கிறார். தயாரிப்பாளர் நான் எப்படி சொல்றது கேட்டு பாக்கிறேன் என்கிறார். நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என பாக்கியா ஆயுதபூஜை ஆர்டர் எடுத்து இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் மீனா தன்னை டிராப் பண்ண செந்திலை அழைக்கிறார். அவர் ஆர்டர் கொடுக்கணும் எனக் கூற அந்த காலில் இன்னொருவர் போல பேசி சமாளித்து விடுகிறார் மீனா. யாரோ என நினைக்கும் பாண்டியனும் அவர் பேசியதில் கடுப்பாகிறார்.

வீட்டில் எல்லாரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். மீனா மற்றும் ராஜி சேர்ந்து கோமதியை கலாய்த்து கொண்டு இருக்கின்றனர்.

ராம் சுதன்

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

15 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

15 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

16 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

17 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

23 hours ago