More
Categories: television television news

தங்கமயிலுக்கு ஷாக் கொடுத்த பாண்டியன்… ஜாலி பண்ணும் பாக்கியா… அசிங்கப்பட்ட மீனா..

VijayTV: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் தங்கமயில் பெற்றோர்கள் வந்து 25 ஆயிரத்திற்கு இவ்வளவு பிரச்சனையா?. நாங்க அந்த காசை கொடுத்து விடுகிறோம் என்கின்றனர். இதனால் பாண்டியன் கோபமாகி ஊதாரித்தனமாக செலவு செய்தால் என்னால் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியுமா?

காசை கொடுத்து விடுகிறேன் எனக் கூறுவதெல்லாம் என்ன பேச்சு கொண்டிருக்கிறார். இதில் தங்கமயிலின் அப்பா மிரண்டு விட பேச்சை மாற்றும் பொருட்கள் குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட வரவேண்டும் என குடும்பத்தினரை அழைத்துவிட்டு செல்கிறார். சரவணனை தனியாக அழைத்த பாண்டியன் தங்கமயிலிடம் கோபமாக இருக்கக் கூடாது என அறிவுரை கூறுகிறார். ராஜியை கதிருடன் கல்லூரிக்கு அனுப்பி வைக்கிறார் மீனா.

Advertising
Advertising

பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா, அமிர்தா, ஜெனி, ஈஸ்வரி நால்வரும் சேர்ந்து ரெஸ்டாரண்டுக்கு வருகின்றனர். பாக்யா ஜெனியிடம் என்னது இது என கேட்க சில நாட்களாக நீங்க மன வருத்தத்தில் இருக்கீங்க. அதற்காக தான் இந்த மாற்றம் என்கின்றனர். அவர்கள் போனையும் வாங்கி வைத்து விடுகிறார்.

நால்வரும் கடலில் குளிக்க, விளையாட, வெரைட்டி சாப்பாடுகளை சாப்பிட்டுக்கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். பாக்கியா மூணு மனசா தான் இங்கே இருப்பா என அவரை ஈஸ்வரி கலாய்த்து கொண்டிருக்கிறார்.

சிறகடிக்க ஆசை தொடரில் சத்யா விஜயாவின் ஒரு லட்சம் பணத்தை திருடிய வீடியோவை ரோகிணி அவரிடம் காட்டிவிடுகிறார். இதில் கோபமாகும் விஜயா நேராக கிளம்பி மீனா வீட்டிற்கு செல்கிறார். சத்யாவை தனியாக சந்திக்கும் சிட்டி வீடியோவை காட்டி உன் மாமா தான் இதை செய்ததாக மாட்டி விடுகிறார்.

அவருடைய போன் தொலைந்துவிட்டது. இதை வேற யாரோ செய்திருக்கலாம். ஏன் நீயே கூட செய்திருக்கலாம். உன்னிடம் திரும்பி இதற்காக வரமாட்டேன் எனக் கூறிவிட்டு சென்று விடுகிறார் சத்யா. வீட்டிற்கு வரும் சத்யா மீனாவிடம் முத்துவிற்கான இன்னொரு சிம்மை கொடுக்கிறார்.

அந்த நேரத்தில் வீட்டிற்கு வரும் விஜயா கோபமாக சத்யாவை போட்டு அடிக்கிறார். மீனா அவரை தடுத்து என்னவென கேட்க ரோகிணி அவரிடம் வீடியோவை காட்டுகிறார். போலீஸ் ஸ்டேஷனிற்கு சத்யாவை இழுத்து செல்ல மீனா மற்றும் சீதா தடுத்து விடுகின்றனர். மீனாவை இனி வீட்டிற்கு வரக்கூடாது என விஜயா சொல்லிவிட்டு செல்வதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Published by
ராம் சுதன்

Recent Posts