More
Categories: television television news

சத்யா வீடியோவை பரப்பும் ரோகிணி… ஜெனியின் புது பிளான். அரசியை அசிங்கப்படுத்த திட்டமிடும் குமார்..

VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் மீனாவிற்கு முத்து கால் செய்து பேசுகிறார். இது யார் நம்பர் என கேட்க, பேசாமல் இருக்க முடியல அதான் போன் வாங்கி பேசினேன் என்கிறார். மீனா தன் மீது பல்லி விழுந்த விஷயத்தை முத்துவிடம் சொல்லுகிறார். சத்தியாவை அழைத்துக் கொண்டு முத்துவிற்கு புது ஃபோன் வாங்க செல்கிறார்.

அங்கிருக்கும் சிலர் சத்யாவின் வீடியோவை பார்க்கின்றனர். வித்யாவும் இது குறித்து ரோகிணியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். நல்லது தான். மீனாவை எங்க அத்த வெளியில் அனுப்பிடுவாங்க. ஸ்ருதியின் அம்மாவும் இது தெரிந்தா அவர்களை அழைத்து போயிடுவாங்க என்கிறார்.

Advertising
Advertising

நீ நல்லா இருக்க எல்லாரையும் வீட்டை விட்டு அனுப்புறியா என வித்யா இருக்க கஷ்டப்பட்டு தேடித்த வாழ்க்கை இதை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறார். விஜயாவை வீடியோ பார்க்க வைக்க மனோஜ் மூலமாக பென் டிரைவில் ஏற்றி எடுத்து செல்கிறார். அதை பார்த்த மனோஜ் முத்துவை திட்டிவிட்டு எத்தனை நாள் என்னை திட்டி இருக்கான். இதை அம்மா கிட்ட சொல்லணும் என்கிறார். ரோகிணி மூலம் அவருடைய நடன பள்ளிக்கு கொடுத்து விடுகிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் இனியா போட்டியில் முதல் மார்க் வாங்கியிருக்க அதற்கு கோபி தான் காரணம் என மேடை ஏற்றுகிறார். இதை பார்த்து பாக்கியா அதிர்ந்து விடுகிறார். வெளியில் வரும் பாக்யாவிடம் கோபி திமிராக பேசுகிறார். அதை தொடர்ந்து அனைவரும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர்.

இனியாவிடம் டான்ஸ் மாஸ்டர் வைத்தது குறித்து பாக்கியா கேட்க இனியா இதெல்லாம் பெரிய விஷயமா என்ன பேசுகிறார். பின்னர் அமிர்தா மற்றும் ஜெனி இணைந்து ஈஸ்வரி மற்றும் பாக்யாவை வெளியில் அழைத்து செல்ல பிளான் போடுகின்றனர். எங்கு போறீங்க என இனியா கேட்க சொல்ல மறந்து விடுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் அரசியை வைத்து சக்திவேல் மற்றும் குமார் இருவரும் பிளான் போடுகின்றனர். பின்னர் மீனா செந்திலுக்கு அரசு வேலைக்காக விளம்பரம் வந்திருப்பதை பார்த்து அவரை தேர்வுக்கு ப்ரிபேர் செய்யக் கூறுகிறார். இதைத் தொடர்ந்து தங்கமயில் தன்னுடைய ரூமில் அமைதியாக இருக்கிறார்.

அவர் அம்மா கால் செய்து பேச ஹனிமூன் பிரச்சனை இன்னும் முடியவில்லை என கூறுகிறார். அடுத்த நாள் வீட்டிற்கு வரும் தங்கமயில் அப்பா மற்றும் அம்மா இருவரும் எங்க வீட்ல காசு பற்றி கவலை இல்லை. சந்தோஷம்தான் முக்கியம் என பேசுகின்றனர். வேண்டுமென்றால் நாங்கள் காசு தருகிறோம் என கூற பாண்டியன் கோபமாகிறார்.

Published by
ராம் சுதன்

Recent Posts