ரோகிணியின் ஆட்டம்… ராதிகாவிடம் சிக்கிய கோபி… சரவணனுக்கு தெரிந்த பணப்பிரச்னை!..
VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் ரோகிணியின் அம்மா மீனா மற்றும் முத்துவை திட்டிவிட்டு வெளியில் வந்து அழுகிறார். வித்யா வீட்டுக்கு வருகிறார் ரோகிணி. அங்கு கிரிஷ் தூங்கிக்கொண்டு இருக்க அவரின் அம்மா கவலையாக இருக்கிறார். ரோகிணி கிரிஷை இனி தத்து எடுக்க மாட்டாங்க என்கிறார்.
முத்து மற்றும் மீனா இருவரும் மாடியில் உட்கார்ந்து புலம்பி கொண்டு இருக்கிறார். அப்போ வரும் ரோகிணி மற்றும் விஜயா, மீனாவை நக்கலடித்து பேசிவிட்டு செல்கின்றனர். மீனா தன்னுடைய அம்மா வீட்டுக்கு முத்துவுடன் வருகிறார். அங்கு சீதாவிடம் பேசிக்கொண்டு இருக்க சத்யா காலேஜில் இருந்து வருகிறார். அட்டெண்டென்ஸ் இல்லாததால் எக்ஸாம் எழுத முடியாது எனக் கூறிவிட்டதாக கூறுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 தொடரில் கதிர் மற்றும் செந்தில் பேசிக்கொண்டு இருக்க அங்கு வரும் சரவணனுக்கு ஹனிமூன் ரூமுக்கு காசை ரெடி பண்ணிய கதை தெரிந்துவிடுகிறது. வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது பாண்டியன் கதிரிடம் காசை கேட்கிறார்.
பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா உட்கார்ந்து இருக்க அவர் அம்மா கோபி வருகிறார் எனக் கூறுகிறார். பின்னர் அம்மா வீட்டுக்கு போன விஷயத்தையும் ராதிகாவிடம் போட்டு கொடுக்கிறார். பாக்கியா எழிலுக்கு கால் செய்து அவருக்கு அறிவுரை கூறுகிறார்.
காலையில் செழியன் எழுந்திருக்க அவரை அழைத்து சென்று ஈஸ்வரியுடன் திட்டி தீர்க்கிறார். இனியா தான் டான்ஸ் போட்டியில் வென்று இருப்பதாக விரைவில் ஆடிஷன் நடக்க இருப்பதாக கூறிக்கொண்டு இருக்கிறார். இதை கேட்டு குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர்.