முத்துவை கைவிட்ட குடும்பம்… பெரிய ஆர்டருக்கு தயாரான பாக்கியா… உண்மை அறிந்த தங்கமயில்
VijayTV: சிறகடிக்க ஆசை தொடரில் ஸ்ருதியிடம் உதவி கேட்கிறார் மீனா. ஸ்ருதி தன் அம்மாவிடம் உதவி கேட்க அவர் முடியாது என மறுத்து விடுகிறார். வாசுதேவன் தன்னுடைய மனைவியிடம் இதை விஜயாவிடம் சொல்லி குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுத்த கூறுகிறார்.
மீனா யாரிடமும் உதவி கேட்காமல் கவலையுடன் வீட்டிற்கு வருகிறார். விஜயா முத்து எங்கே நான் கேட்க சவாரிக்கு சென்று இருப்பதாக பொய் கூறுகிறார். பிறகு அண்ணாமலை விஷயத்தை கேட்க மொத்த உண்மையையும் கூறிவிடுகிறார். இந்த விஷயத்துல நீங்க செஞ்சது தப்பு இனிமே இப்படி செய்யாதீங்க என மீனாவை கடிந்து கொள்கிறார் அண்ணாமலை.
இதை பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார். அடுத்த நாள் காலை போலீஸ் நிலையத்திற்கு வரும் மீனா இன்ஸ்பெக்டரிடம் உண்மையை சொல்லி அழுக அவர் முத்துவை விடுதலை செய்கிறார். பின்னர் வெளியில் வரும் முத்து சத்யாவிற்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைக்கிறார்.
பாக்கியலட்சுமி தொடரில் ஈஸ்வரியை அழைத்து வந்து பிரியாணியின் ஆர்டர்களுக்கு விளக்கேற்றி வைக்க கூறுகிறார். அவர் ராமமூர்த்தியிடம் மனதார வேண்டிக் கொண்டு விளக்கேற்றி வைக்கிறார். பின்னர் வேலைகள் மளமளவென நடக்கின்றது.
அமிர்தா மற்றும் அவரின் அம்மா பேசிக் கொண்டிருக்க வீட்டில் பொருள் இல்லாதது குறித்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அமிர்தா சங்கடத்துடன் அதை சமாளித்துக் கொண்டிருக்க. எழில் வந்து விடுகிறார். அவரை சாம்பார் வைத்து தோசை ஊற்றி கொடுத்து நிலாவிற்கு ஊட்டுகிறார்.
அமிர்தா தான் வேலைக்கு போகவா எனக் கேட்க அதெல்லாம் வேண்டாம் எனக் கூறிவிடுகிறார் எழில். நிலாவை பார்த்துக்கோ எல்லாம் சரி பண்ணிடலாம் என்கிறார். பாக்கியா ரெஸ்டாரண்ட்டில் பிரியாணிகள் தயாராகி ஆகி அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்வரி பழனிச்சாமியுடன் வீட்டிற்கு கிளம்புகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் கதிர், செந்தில் மற்றும் பழனி தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கடன் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அங்கு வரும் சரவணன் உண்மையை சொல்லியிருக்க வேண்டியது தானே எனக்கு ஏற்க அதற்கு கதிர் மறுப்பு தெரிவித்து விடுகிறார். பின்னர் சரவணன் தன்னுடைய நண்பர்களிடம் கடன் கேட்டுக் கொண்டிருக்க அங்கு தங்கமயில் வருகிறார்.
கதிர் தம்பி ஏன் இப்படி செஞ்சாரு? தெரியாம எடுப்பது திருட்டு மாதிரி தானே கூற சரவணன் சத்தம் போடுகிறார். அவன் பிரச்சினை இல்லை நாம ஹனிமூன் போனபோது ரூம் வாடகைக்காக தான் அவன் காசு எடுத்தான் என்கிறார். இதை கேட்டு தங்கமயில் அதிர்ச்சி அடைகிறார்.
இப்பதான் ஒரு பிரச்சினை முடிந்தது. அதற்குள் தனக்கு இன்னொரு பிரச்சனையா என அவர் அதிர்ச்சி அடைகிறார். இதிலிருந்து எப்படியாவது என்னை காப்பாற்றி விடு கடவுளே என வேண்டிக் கொள்கிறார். ராஜி தன்னிடம் உள்ள தோடை கதிருக்கு கழட்டி கொடுத்து கடனை அடைக்க சொல்கிறார்.