தேவையே இல்லாம உருட்டுனா இப்படிதான்… டிஆர்பியில் தொடர் தோல்வியை தழுவும் சிறகடிக்க ஆசை
VijayTV: சின்னத்திரை சீரியல்கள் வரவேற்பை அதன் வார இறுதி டிஆர்பி தான் நிர்ணயிக்கும். அந்த வகையில் டாப் சீரியல்களின் டிஆர்பி விபரம் வெளியாகி இருக்கிறது. வழக்கம்போல இந்த வாரமும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு விபூதி அடிக்கப்பட்டு விட்டது.
விஜய் டிவி கடந்த சில வருடங்களாக டிஆர்பியில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. முதல் 10 இடங்களை சன் டிவி மட்டுமே பிடித்து வந்த காலத்தில் தன்னுடைய வித்தியாசமான சீரியல்களால் இரண்டு அல்லது மூன்று இடங்களை கூட விஜய் டிவி தக்க வைத்து கொண்டு வந்தது.
அதிலும் சிறகடிக்க ஆசை ஒளிபரப்பான பின்னர் பல நேரங்களில் முதல் இடத்தை தக்க வைத்ததையும் பார்த்துக்க முடிந்தது. இந்நிலையில் ரகசியங்கள் நிறைய அடங்கி இருக்கும் சிறகடிக்க ஆசை செல்ல வேண்டிய ரூட்டை மாற்றி தேவையில்லாத கதையை புகுத்தி இயக்குனர் ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்பி வருகிறார்.
அதனால் டிஆர்பியில் சிறகடிக்க ஆசை சறுக்கலை சந்தித்து 7.76 புள்ளிகளுடன் ஐந்தாம் இடம் பிடித்திருக்கிறது. சன் டிவியின் இரண்டாவது பாகமாக ஓடிவரும் சுந்தரி சீரியல் 7.85 புள்ளிகள் பெற்று ரேட்டிங்கில் 4ஆவது இடத்தில் இருக்கிறது.
விஜய் டிவியின் செல்ல பிள்ளையான கேப்ரியல்லா நடிப்பில் மருமகள் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் இந்த சீரியல் 7.85 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே தொடர் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் இந்த சீரியல் தொடர்ந்து முதல் இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அந்த வகையில் இந்த வாரம் 8. 26 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு தொடர் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது. இருந்தும் ரசிகர்களிடம் ஹிட் அடிக்க தற்போது இரண்டாம் இடத்தில் 8.35 டி.ஆர்.பி புள்ளிகளுடன் இருக்கிறது.
சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி நடிப்பில் ஒளிபரப்பாகி வருகிறது கயல் சீரியல். ஒரு மாதத்திற்கும் அதிகமாக ஒளிபரப்பாகி வந்த கல்யாண எபிசோட் சமீபத்தில் முடிந்திருக்கிறது. அந்த புகழால் தற்போது 9.59 புள்ளிகளை பெற்று டி.ஆர். பியில் முதல் இடத்தில் இருக்கிறது.