குடித்துவிட்டு வந்த செழியன்… அசிங்கப்பட்ட முத்து, மீனா… ஆதாருக்காக அலையும் தங்கமயில்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-08 10:56:45  )
குடித்துவிட்டு வந்த செழியன்… அசிங்கப்பட்ட முத்து, மீனா… ஆதாருக்காக அலையும் தங்கமயில்!..
X

VijayTV: முத்து மற்றும் மீனா இருவரும் கிறிஸை அழைத்து வர அவரது வீட்டிற்கு செல்கின்றனர். அவர் அம்மா ரோகிணிக்கு கால் செய்து இந்த விஷயத்தை கூற தன் அம்மாவிடம் ஒரு பிளானை சொல்கிறார். பையனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிருஷ்ணர் வேடத்தில் வருகின்றனர்.

அதை பார்த்து ரோகிணி ஆச்சரியப்பட்டு நிற்க மனோஜ் கலாய்க்கிறார். பின்னர் ரோகிணி கிரிஷை ஆசையாக பார்க்க விஜயா கலைந்து போன குழந்தை ஞாபகம் வந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார். பின்னர் பூஜை முடிந்தவுடன் முத்து கிருஸிடம் இங்கேயே இருந்து விடுகிறாயா என கேட்கிறார்.

உடனே ரோகிணி அவர் அம்மாவிடம் கண்ணைக் காட்ட அவர் முத்து மற்றும் மீனாவை சத்தம் போடுகிறார். என் பேரன் அனாதை இல்லை. இனிமே எங்க மூஞ்சில புடிக்காதீங்க என கூறிவிட்டு பையனை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கோபியை சென்று சந்திக்கிறார். இருவரும் அங்கு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது செழியன் குடித்து விடுகிறார். அவரை வீட்டிற்கு அழைத்து வர கோபியை இந்த உலகத்திலேயே நீங்கதான் சிறந்த அப்பா என பாராட்டுகிறார்.

பின்னர் வீட்டிற்கு அழைத்து வரும் கோபி செழியன் குடித்திருக்கிறான் என்பதை கூறிவிட்டு அவரை ரூமில் படுக்க வைக்கிறார். கீழே வரும் பூமியை எதுக்கு செழியனை குடிக்க வைப்பதாக பாக்யா குற்றம் சாட்டுகிறார். அவனுக்கு இந்த வீட்டில் நிறைய கஷ்டம் இருக்கு. என் பிள்ளை கிட்ட பழகுவதை பற்றி நீங்கள் சொல்லாதீங்க என கூறிவிட்டு செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் தங்கமயில் அப்பா மற்றும் அம்மா கிளம்பி விட ஆதார் கார்டை எப்படி எடுப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறார். வீட்டிற்கு வரும் பாண்டியன் கணக்கு வழக்கில் 11 ஆயிரம் குறைவதாக கதிர் மீது குற்றம் சுமத்துகிறார். ஆனால் ராஜி கதிருக்கு ஆதரவாக பேசுகிறார்.

இதை கேட்கும் செந்தில் அந்த பிள்ளை உண்மை தெரியாமல் பேசுது. தெரிஞ்சா அதுவே உன் அப்பாகிட்ட சிக்க வச்சிரும் என கூறுகிறார். தங்கமயில் இதையெல்லாம் யோசிக்காமல் செந்திலிடமிருந்து ஆதார் கார்டை எப்படி எடுப்பது என யோசித்துக் கொண்டு வழியை தேடிக் கொண்டிருக்கிறார்.

Next Story