அடேங்கப்பா... இது பிக்பாஸ்8 ஆ.. இல்ல விஜய் டிவி சீரியலா? எல்லா உங்க முகமா இருக்கே!
Vijaytv: பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர் குறித்த அப்டேட்கள் கசிந்திருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் எட்டு தொடங்குவதற்கு முன்னரே அதை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதனால் அந்த இடத்தில் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்று கேள்வி எழுந்தது.
நிறைய நடிகர்களிடம் நடந்த பேச்சுவார்த்தை அடுத்து அந்த இடத்தை விஜய் சேதுபதி பிடித்திருக்கிறார். கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசனில் ப்ரோமோக்களை வெளியிட்டு ரசிகர்களை குழப்ப வேண்டாம் என தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்து இருக்கிறது.
அதன்படி இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இதுவரை இரண்டே இரண்டு ப்ரோமோக்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. அதுபோல போட்டியாளர்கள் தேர்விலும் விஜய் டிவி நிறைய வரைமுறைகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வித்தியாசமான போட்டியாளர்கள் இறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவர்கள் ஆசையை பொய்யாக்கும்படி இந்த வருடம் விஜய் டிவி ஆட்கள் தான் எக்கச்சக்கமாக களம் இறங்கப் போவதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்திருக்கிறது. பிரபல சீரியல் நடிகர் அருண் பிரசாத், சமீபத்தில் முடிந்த செல்லம்மா சீரியலின் அர்னவ் மற்றும் அன்ஷிதா கலந்து கொள்ள இருக்கின்றனர்.
அதுபோல பிரபல சின்னத்திரை நடிகர் ஆன வினோத் பாபு மற்றும் பவித்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பல வருடமாக சின்னத்திரையில் நடித்து வரும் தீபக், பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்த ஃபரீனா மற்றும் தர்ஷா குப்தா ஆகியோரும் கலந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
எப்போதுமே ஒரு சீசனுக்கு இரண்டிலிருந்து மூன்று பேர் மட்டுமே விஜய் டிவியில் இருந்து உள்ளே வருவார்கள். ஆனால் இந்த சீசனில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் அனைவரும் விஜய் டிவி ஆட்கள் தான் என்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.