நல்லா இருந்த மனுஷன கெடுத்துவிட்டாங்க… விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் டீம் போட்ட கண்டீஷன்!..

Vijaysethupathi: பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை வரும் அக்டோபர் ஆறாம் தேதியில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தற்போது இவருக்கு நிகழ்ச்சியின் தயாரிப்பு குழு ஒரு கண்டிஷனை போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போதைய இள ரசிகர்களுக்கு அவரின் இருப்பை காட்டியதற்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என கூற வேண்டும். அந்த புகழை வைத்து அவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்தது.

தொடர்ச்சியாக தன்னுடைய பேச்சுத் திறமையால் ரசிகர்களை கவர்ந்து நிகழ்ச்சியில் ஆளுமை செலுத்தி வந்தார். அந்த வகையில் ஏழு சீசன்களை கமல்ஹாசன் மட்டுமே தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் கடைசி சீசனில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் மற்ற பிற விஷயங்களுக்காக நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறி இருக்கிறார்.

அவருடைய இடத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி தற்போது எட்டாவது சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார். இவருடைய ஸ்டைல் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் பார்க்க ஆர்வமாக காத்திருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் ரசிகர்களிடம் நெகட்டிவ் இமேஜ் இல்லாத விஜய் சேதுபதி நிகழ்ச்சிக்கு மேலும் பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் போராடி சினிமாவில் ஒரு இடத்தை பிடித்த விஜய் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். அப்படங்களின் போஸ்டர் வெளியீடு மற்றும் இசை வெளியீட்டு இருக்கு தன்னுடைய சமூக வலைதளம் மூலம் ப்ரோமோஷன் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

ஆனால் இந்நிலையில் விஜய் டிவி நிர்வாகம் பிக் பாஸ் முடியும் வரை மற்ற எந்த படங்களுக்கும் ப்ரமோஷன் செய்யக்கூடாது என கண்டிஷன் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்ட நிலையில் இனி நூறு நாட்களுக்கு விஜய் சேதுபதி வேறு படங்கள் எதற்கும் உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles
Next Story
Share it