விஜய் டிவிக்கு டாட்டா காட்டும் மணிமேகலை… அடுத்து எண்ட்ரி கொடுக்க இருக்கும் முக்கிய டிவி
Manimegalai: பிரபல தொகுப்பாளர் மணிமேகலை தற்போது அடுத்த தாவ இருக்கும் டிவி குறித்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சன் மியூசிக்கில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் மணிமேகலை. திடீரென நடன கலைஞர் ஹுசைனை திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து குக் வித் கோமாளியில் கோமாளியாக எண்ட்ரி கொடுத்தார் .
தொடர்ந்து நான்கு சீசன்கள் கலந்து கொண்டவர். திடீரென கடந்த சீசனில் இருந்து வெளியேறினார். அதை தொடர்ந்து ஐந்தாவது சீசனில் தொகுப்பாளராக களமிறங்கினார். பைனலை நெருங்கிய நேரத்தில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனுடன் தன்னுடைய நிகழ்ச்சியில் குக்காக இருக்கும் போட்டியாளர் பிரபல அங்கர்.
அவர் தன்னை தன்னுடைய வேலையை செய்ய விடாமல் அடக்குமுறை செய்வதாக பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து இந்த விஷயம் சர்ச்சையானது. ரசிகர்கள் அனைவரும் மணிமேகலை தரப்புக்கு ஆதரவாக நிற்க, பிரபலங்கள் பிரியங்காவிற்கு ஆதரவாக களம் இறங்கினர். ஒரு கட்டத்தில் மணிமேகலை வெளியேறவில்லை அவர் டிவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் செய்திகள் வெளியானது.
இதனால் இனிமேல் மணிமேகலை விஜய் டிவியில் பங்கெடுக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து தன்னுடைய தாய் வீடான சன் டிவி பக்கம் செல்லுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் அதிலிருந்து மாறாக ஜீ தமிழ் பக்கம் சென்று இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. தொகுப்பாளராக மட்டுமல்லாமல் யூட்யூபிலும் வீடியோ பதிவிட்டு நல்ல வருமானம் மணிமேகலை பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.