பாண்டியன் ஸ்டோரில் இருந்து வெளியேறும் முக்கிய பிரபலம்.. உடையும் சூப்பர் ஜோடி!..

by Akhilan |
பாண்டியன் ஸ்டோரில் இருந்து வெளியேறும் முக்கிய பிரபலம்.. உடையும் சூப்பர் ஜோடி!..
X

Pandian stores: பிரபல சின்னத்திரை தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் இருந்து முக்கிய பிரபலம் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் பிரபல தொடராக இருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ். 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஐந்து ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது. முதல்முறையாக தமிழ் சீரியல் தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கவேல், வெங்கட், ஹேமா, விஜே சித்துவுடன், சரவண விக்ரம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் நடித்துக்கொண்டு இருந்த போது நடிகை விஜே சித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் திடீர் உயிரிழப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

தொடர்ச்சியாக அவருடைய கேரக்டருக்கு காவ்யா அறிவுமணி, லாவண்யா உள்ளிட்டோர் நடித்தனர். பாண்டியன் ஸ்டோர்ஸில் ரொம்பவே பிரபலமாக இருந்தது கதிர் மற்றும் முல்லை ஜோடிதான். இதில் விஜே சித்ரா இறந்தவுடன் அந்த ஜோடியின் பிரபலமும் குறைந்தது.

இதுபோலவே பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரிலும் கதிர் மற்றும் ராஜி ஜோடி பிரபலமாக இருந்து வருகின்றனர். கதிராக சக்திவேலும், ராஜியாக ஷாலினியும் நடித்துவருகின்றனர். தற்போது இந்த ஜோடியும் ரசிகர்களிடம் வெகு பிரபலமாகி வருகின்றனர்.

இந்நிலையில் சக்திவேல் மிகப்பெரிய விபத்து ஒன்றில் சிக்கி நிறைய காயங்களுடன் சிகிச்சையில் இருக்கிறார். இதனால் அவர் சின்னத்திரை சீரியலில் தொடருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் சீரியலை விட்டு விலகினால் கதிர் மற்றும் ராஜி ஜோடியின் பிரபலமும் குறையும் எனவும் கூறப்படுகிறது.

Next Story